Kanguva Release : சிக்னல் கிடைச்சாச்சு..கங்குவா படத்தை வெளியிட உயர்நீதிமன்றம் அனுமதி...ஆனால் ஒரு கண்டிஷன்
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தி மனுதாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட நிபந்தனைகளுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளார்கள்.
கங்குவா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்பட்ம வரும் நவம்பர் 31 ஆம் தேதி வெளியாக இருந்தது. படம் வெளியாக ஒரு சில நாட்களே இருந்த நிலையில் இப்படத்தை வெளியிடுவதில் புதிய சர்ச்சை ஏற்பட்டது.
சென்னையில் வசித்து வந்தவர் அர்ஜூன் லால். இவரிடம் கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ரூபாய் 10 கோடி 35 லட்சம் கடன் பெற்றுள்ளது. அர்ஜூன் லால் தற்போது காலமாகிவிட்டார். இவர் திவாலானவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அர்ஜூன்லாலுக்கு ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இதுவரை ரூபாய் 20 கோடியை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் சொத்தாட்சியர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கடன் தொகையான ரூபாய் 20 கோடியை வரும் 13ம் தேதி செலுத்தாவிட்டால் கங்குவா படத்தை வௌியிடக்கூடாது என்று உத்தரவிட்டது
கங்குவா பட ரிலீஸூக்கு உயர் நீதிமன்றம் அனுமதி
தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக 6 கோடி 41 லட்சம் ரூபாய் சொத்தாட்சியர் அலுவலகத்தில் செலுத்தப்பட்டதாகவும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மீதி 3 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்கும் அவகாசத்துடன் படத்தை வெளியிட அனுமதி கேட்டு கோரிக்கை வைத்திருந்தது. 350 கோடி செலவில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்திற்கு 20 கோடியை மொத்தமாக வழங்கினால் மட்டுமே படத்தை வெளியிட அனுமதி வழங்க வேண்டும் என சொத்தாட்சியர் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. நாளை கங்குவா படம் வெளியாகுமா ஆகாதா என சூர்யா ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது இந்த செய்தி.
உயர்நீதிமன்றத்தில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வைத்த கோரிக்கையை ஏற்று கங்குவா திரைப்படத்தை வெளியிட நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் மீதி 3 கோடி ரூபாயை ஸ்டுடியோ கிரீன் நிறுவன செலுத்த வேண்டும் என நீதிமன்றம் நிபந்தையும் கொடுத்துள்ளது.
கங்குவா படக்குழு
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் பாபி தியோ , திஷா பதானி , போஸ் வெங்கட் , கருணாஸ் , யோகி பாபு , ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.