‛நான் முதலமைச்சர் ஆக ஆசைப்படுறேன்... அதை தடுக்குறாங்க’ - மீரா மிதுனின் அடுத்த அலப்பறை!
சில வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறேன் தேர்தலில் பங்கேற்க வேண்டும், முதலமைச்சராக வேண்டுமென்று. அதை தடுப்பதற்காகவே இப்படி செய்கிறார்கள் - மீரா மிதுன்
மாடலிங் துறையில் இருந்துகொண்டு அழகி போட்டிகளில் பங்கேற்ற மீரா மிதுன் அழகி பட்டத்தை மோசடியாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்து அவரது 'மிஸ் சவுத் இந்தியா' பட்டமும் திரும்ப பெறப்பட்டது. அப்போது முதல் சமூக வலைதளங்களில் இவர் பெயர் அடிபட தொடங்கியது. அதன் பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் பரவலான கவனத்தை பெற்றார்.
இதனையடுத்து அவர் சீனியர் நடிகர், நடிகைகள் குறித்த சர்ச்சை கருத்தை கூறினார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் மீரா மிதுன் ஒடுக்கப்பட்ட மக்களை தகாத முறையில் பேசியதுடன் , திரைப்பட துறையில் இருந்தே ஒடுக்கப்பட்ட சமூகத்தை வெளியேற்ற வேண்டும் என்று கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அது தொடர்பான புகாரில் சென்னை மத்திய குற்ற பிரிவு காவல் துறையினர் மீரா மிதுன் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பிணையில் வெளியே வந்த மீரா மிதுனுக்கு 'பேயை காணோம்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தை செல்வ அன்பரசன் இயக்கி வருகிறார்.
ஆனால், படப்பிடிப்பு தளத்திலிருந்து சில நாள்களுக்கு முன்பு மீரா தலைமறைவானார். அவரோடு தங்கியிருந்த உதவியாளர்களையும் காணவில்லை, அவர்கள் தங்கியிருந்த அறையில் இருந்த பொருள்களையும் காணவில்லை. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மீரா மீதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நிறைய சைக்கோக்கள் சமூகத்தில் இருக்கின்றனர். அநியாயங்கள் தலை தூக்கியுள்ளன.
நான் படப்பிடிப்பு தளத்திலிருந்து ஓடிபோய்விட்டேன் என செய்திகள் வருகின்றன. மக்களுக்கு தெரியும் மீரா மிதுன் யார் என்று. என்னுடன் பணியாற்றியவர்களுக்கு தெரியும் நான் எவ்வளவு ஒழுக்கமுடையவள், தொழில்பக்தி உடையவள் என்று. தேவையில்லாமல் எனது பெயரை கெடுக்க முயல்கிறார்கள்.
சில வருடங்களாகவே சொல்லிக்கொண்டு இருக்கிறேன் தேர்தலில் பங்கேற்க வேண்டும், முதலமைச்சராக வேண்டுமென்று. அதை தடுப்பதற்காகவே இப்படி செய்கிறார்கள்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Spider Man: ரஜினி இல்லை... அஜித் இல்லை... விஜய் இல்லை... அதிகாலையில் தியேட்டரை அதிரவிட்ட ஸ்பைடர் மேன்!