மேலும் அறிய

Chandramukhi 2: ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த லைகா.. சந்திரமுகி 2 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு..!

Chandramukhi 2 Release Date Postponed: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் சந்திரமுகி 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சந்திரமுகி

கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் தான் தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெருமையை இன்றளவும் கொண்டுள்ளது. சந்திரமுகி படத்தில்  ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு, நாசர், சோனுசூட், வினீத், மாளவிகா, செம்மீன் ஷீலா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.  சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் பிரபு இப்படத்தை தயாரித்திருந்தார். வித்யாசாகர் இசையில் உருவான பாடல்களும் ரசிகர்களின் பேவரைட் ஆக அமைந்தது.

சந்திரமுகி 2

தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. இயக்குநர் பி. வாசு தான் இப்படத்தை இயக்கியுள்ளார். ராகவா லாரன்ஸ் , கங்கனா ரனாவத்,  வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மகிமா நம்பியார் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ள நிலையில் ஆஸ்கர் விருது வென்ற எம்.எம் கீரவாணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 ஆம் பாகத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் பிஸியாக இருந்து வந்தனர். ”ரஜினி சார் ரசிகனாக இருந்து பலமுறை சந்திரமுகி படத்தை பார்த்துள்ளேன். அதில் நடிக்க போகிறேன் என சொன்னதும், அதை விட அதிக முறை சந்திரமுகி படத்தை பார்த்தேன். ரஜினி சாரை பார்த்து ஆசிர்வாதம் வாங்கி விட்டுதான் இந்த படத்தில் நடிக்க தொடங்கினேன். நான் இரண்டாம் பாகத்தில் நடிக்கப்போகிறேன் என்றதும், சந்திரமுகி யாராக இருப்பார்கள் என வாசு சார் கிட்டே கேட்டேன். கங்கனா மேடம் என்று சொன்னதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ” புரோமோஷனில் கலந்துகொண்ட ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்

ரிலீஸ் ஒத்திவைப்பு

இந்நிலையில் படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை மேம்படுத்த இன்னும் சில காலம் பிடிக்கும் என்பதால் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கத் திட்டமிட்டுள்ளது லைகா நிறுவனம். செப்டம்பர் 15 அன்று  மார்க் ஆண்டனி மற்றும் சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாக இருந்த நிலையில் தற்போது சந்திரமுகி படத்தின் தேதி ஒத்திவைக்கப் பட்டிருக்கும் நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகும் மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வசூலை எடுக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

எப்போ ரிலீஸ்

சந்திரமுகி படத்தைப் பொறுத்தவரை வருகின்ற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் பார்க்கிங் உள்ளிட்டப் படங்கள் அதே நாளில் வெளியாக இருக்கும் நிலையில் சந்திரமுகி 2 படத்திற்கு பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க : Rajinikanth On Marimuthu: "மாரிமுத்து ஒரு அருமையான மனிதர்..” நடிகர் மாரிமுத்து மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

Vairamuthu Condolences:"மாரிமுத்துவின் மரணம் உறவுகளின் மரணம்.." பெரும் சோகத்தில் கவிஞர் வைரமுத்து..!

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Embed widget