பாலிவுட்டின் பேசப்படாத பக்கம்: காஸ்டிங் கவுச் பிரச்சினையும் பாதிக்கப்பட்ட பிரபலங்களும்!
இந்தத் துறையில் நுழையும் பல புதியவர்கள் தங்கள் பெர்சனல் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் காஸ்டிங் கவுச் என்ற மன மற்றும் உடல் ரீதியான வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.
பாலிவுட் திரையுலகம் வெளியில் பார்க்க படுகவர்ச்சியான விவாதப் பொருளாக இருந்தாலும் உள்ளே திரைக்குப் பின்னால் பேசப்படாத பல கதைகள் உள்ளன. அவை ஒருபோதும் வெளிவருவதே இல்லை. அதில் காஸ்டிங் கவுச் எனப்படும் வாய்ப்புகளுக்காக ஒருவரை பாலியல் ரீதியான சேவைகளைச் செய்யச் சொல்வது கடந்த பல தசாப்தங்களாக பெரிதும் விவாதிக்கப்படாத ஒன்று.
இந்தத் துறையில் நுழையும் பல புதியவர்கள் தங்கள் பெர்சனல் வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் காஸ்டிங் கவுச் என்ற மன மற்றும் உடல் ரீதியான வேதனையை அனுபவிக்க வேண்டியுள்ளது. தாமதமாக, பிரபலங்கள் இந்த பிரச்சினையைப் பற்றி பேசவும், அதைப் பற்றி தாங்கள் பாதிக்கப்பட்டதையும் வெளிப்படையாகச் சொல்லத் தொடங்கினர், அவர்கள் பேசத் தொடங்கியது பாலிவுட்டின் இருண்ட பக்கத்தில் வெளிச்சத்தைப் பாய்ச்சத் தொடங்கியது.
சுர்வீன் சாவ்லா
2014 இல் ஹேட் ஸ்டோரி 2 திரைப்படத்தில் தனது துணிச்சலான நடிப்புடன் பாலிவுட்டில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார் சுர்வீன் சாவ்லா. அவர் தான் தென்னிந்தியத் திரையுலகில் காஸ்டிங் கவுச் பிரச்சினையைத் தான் எதிர்கொண்டதாகவும், ஆனால் தான் ஒருபோதும் உழைப்பைக் கைவிடவில்லை என்றும் தனது கடின உழைப்பைத் தொடர்ந்ததாகவும் கூறி தனக்கு நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டார். .
கல்கி கோச்லின்
காஸ்டிங் கவுச் பற்றி குரல் கொடுத்து வரும் சில பிரபலங்களில் இவரும் ஒருவர். வாய்ப்புக்காகச் சமரசம் செய்து கொள்ளுமாறு கல்கியிடம் கேட்டுக் கொண்டபோது அந்த வாய்ப்புகளை நிராகரித்ததாக அவர் கூறுகிறார்.
ஆயுஷ்மான் குரானா
ஒரு நடிகராக தன்னை நிலைநிறுத்துவதற்கு முன்பு, ஆயுஷ்மான் குரானா சின்னத்திரையில் நன்கு அறியப்பட்ட தொகுப்பாளராக இருந்தார். அவர் வளர்ந்து வந்த நாட்களில் சில நடிகர்கள் பாலியல் ரீதியான சேவைகளை வழங்குமாறு அவரிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதை அவர் மறுத்துவிட்டார். காஸ்டிங் கவுச் என்பது பாலிவுட்டின் பேசப்படாத உண்மை என்று ஊடகங்களிடம் அவர் கூறியுள்ளார்.
View this post on Instagram
கங்கனா ரணாவத்
தனது பவர்ஃபுல் ஸ்க்ரீன் ப்ரெசன்ஸுக்காக நன்கு அறியப்பட்டவர் கங்கனா. சிறந்த நடிகையாகவே இருந்தாலும் அவரிடமும் பாலியல் ரீதியான சேவைகளை எதிர்பார்த்துள்ளது பாலிவுட்.
View this post on Instagram
ரன்வீர் சிங்
பாலிவுட்டின் பியூட்டிஃபுல் ஹங்க் என வர்ணிக்கப்படுபவர் ரன்வீர் சிங்.அவர் தான் காஸ்டிங் கவுச் பிரச்சினையை எதிர்கொண்டதைப் பற்றி அவரும் பொதுவில் பகிர்ந்திருக்கிறார். ஆனால் எப்படியும் தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைத்துவிடும் என நம்பி இருக்கிறார். எனவே அவர் ஒருபோதும் அத்தகைய விஷயங்களில் தான் சமரசம் செய்யவில்லை என்கிறார்.