மேலும் அறிய

The Verdict: ஹாலிவுட் பாணியில் உருவாகும் “தி வெர்டிக்ட்” - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட பிரசன்னா, சினேகா!

தி வெர்டிக்ட் திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி பட ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சென்னையில் உள்ள அதன் துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்படம் தொடர்பாக வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில், “கோலிவுட்டில் படம் தயாரிப்பதில் அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது” என தெரிவித்துள்ளது.

மேலும், “இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் டெக்சாஸ், ஆஸ்டினில் படமாக்கப்பட்டுள்ளது.அக்னி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பாக உருவாகும்  முதல் திரைப்படத்துக்கு  "தி வெர்டிக்ட்" என பெயரிடப்பட்டுள்ளது. திரில்லர் கலந்த கோர்ட்ரூம் டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது.  தயாரிப்பாளர் பிரகாஷ் மோகன்தாஸ் மற்றும் இயக்குநர் கிருஷ்ணா சங்கர் இருவரும்  டெக்சாஸில் வசிப்பவர்கள் என்பதால் இப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின் ஆஸ்டின், டெக்சாஸில் படமாக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் அந்த நகரங்களில் படமாக்கப்பட்ட முதல் சர்வதேச இந்தியத் திரைப்படம் என்ற பெருமையை “தி வெர்டிக்ட்” பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் விறுவிறுப்பாக நடைபெற்ற ஷூட்டிங்கால் இப்படம் 23 நாட்களில் படமாக்கப்பட்டுள்ளது. தி வெர்டிக்ட் படத்தில் நடிகை சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வித்யுலேகா ராமன் மற்றும்  பிரகாஷ் மோகன்தாஸ் ஆகியோரோடு உள்ளூர் அமெரிக்கக் கலைஞர்களும் ஐந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி படப்புகழ் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இறுதிச்சுற்று, சூரரைப் போற்று மற்றும் விக்ரம் வேதா படப்புகழ் சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார். பிரபல இளம் பாடகர் ஆதித்யா ராவ் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.  

அனைவரும் ரசித்து மகிழும் சிறப்பான படைப்புகளை மாறுபட்ட களங்களில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அக்னி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் “தி வெர்டிக்ட்” திரைப்படம் இந்தியத் திரைத்துறையில் ஒரு ஆரம்பமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நடிகை சினேகா மற்றும் அவரது கணவர் பிரசன்னா ஆகியோர் தி வெர்டிக்ட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"பிரஷர் தாங்கல" மாணவர்களை பலி கேட்கும் நுழைவுத் தேர்வுகள்.. கோட்டாவில் மீண்டும் தற்கொலை!
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
Embed widget