Captain Miller Release: பொங்கலுக்கு ரிலீசாகும் கேப்டன் மில்லர்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் மோதும் தனுஷ்?
படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கேப்டன் மில்லர் படம் குறித்த அப்டேட்டை படக்குழு கொடுத்துள்ளது
Captain Miller Release: தனுஷ் நடிக்கும் கேப்டன் மில்லர் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
ராக்கி, சாணிக்காயிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் படத்தில் தனுஷ் நடித்துளார். வரலாற்று பாணியில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தனுஷுக்கு ஹீரோயினாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். இவர்கள் தவிர படத்தில் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர், சிவக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஆறுமாதங்களாக நடந்த படபிடிப்பு கடந்த ஜூலையுடன் முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கேப்டன் மில்லர், டிசம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. பொங்கலுக்கு ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படமும் ரிலீசாக உள்ளது. ஐஸ்வர்யா ரஜினி காந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்தில், மொய்தீன் பாயாக சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையை ஒட்டி கேப்டன் மில்லர் படமும், லால் சலாம் படமும் ஒன்றாக ரிலீச்சாக உள்ளன. இதனால், ரஜினியுடன் தனுஷ் மோதுவதாக ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Let’s go pic.twitter.com/pec8VBJXAg
— G.V.Prakash Kumar (@gvprakash) November 8, 2023
கேப்டன் மில்லர், லால் சலாம் மட்டும் இல்லாமல் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், சுந்தர் சி இயக்கி இருக்கும் அரண்மனை 4 உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையே ஜனவரி 26ம் தேதி விக்ரம் நடித்துள்ள தங்கலான் படமும் ரிலீசாக உள்ளது.
மேலும் படிக்க: Ticket Booking: தீபாவளி படங்கள் பார்க்க ரெடியா? .. ஜப்பான், ஜிகர்தண்டா-2 டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!