மேலும் அறிய

Captain Miller: கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்.. அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ்.. குஷியில் தனுஷ் ரசிகர்கள்!

“நீ தனியா வந்தா தல மட்டும் உருளும், நீ படையா வந்தா சவ மழ குவியும், கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” எனும் பாடல் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.

கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் அப்டேட் கொடுத்து தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் தனுஷ்  நடித்து வரும் திரைப்படம் கேப்டன் மில்லர்.  பிரியங்கா மோகன் இப்படத்தில் நாயகியாக நடிக்க, ஜான் கொக்கன், சிவராஜ் குமார், நிவேதிதா, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இப்படத்தில் இணைந்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

தன் மக்களுக்காக ஆயுதம் ஏந்தி போராடும் நாயகனை மையப்படுத்தியும், போர் சூழலை சார்ந்தும் இப்படம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு ஜூலை 28 படத்தின் டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் நடிகர், நடிகைகள் ஒவ்வொருவராக தங்கள் பகுதி காட்சிகளை முடித்து வரும் நிலையில், படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் 15ஆம் தேதி கேப்டன் மில்லர் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசைக்கோர்ப்புப் பணிகள் பற்றிய கலக்கலான அப்டேட் ஒன்றை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் பகிர்ந்துள்ள பதிவில், "தழும்புகள் வருவதற்கு முன்பே நான் ஆயுதத்தை சுவைத்துவிட்டேன். என் பெயரைக் கேட்டால் பயப்படக் கற்றுக்கொள்வாய், உன் கண்கள் அதைப் பார்க்காது.

நீ தனியா வந்தா தல மட்டும் உருளும்

நீ படையா வந்தா சவ மழ குவியும்

கில்லர் கில்லர் கேப்டன் மில்லர்” எனும் பாடல் வரிகளைப் பகிர்ந்துள்ளார்.

சுயாதீன இசைக்கலைஞரும் பாடலாசிரியருமான கேபர் வாசுகி இந்த வரிகளை எழுதியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், இசைக்கோர்ப்பு பணிகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கேப்டன் மில்லர் படம் ப்ரீ பிஸ்னஸிலேயே பல கோடிகளைக் குவித்து கோலிவுட் வட்டாரத்தில் எதிர்பார்ப்புகளை எகிறவைத்து வரும் ஜி.வியின் இந்த அப்டேட் தனுஷ் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget