மேலும் அறிய

Dhanush Movie Lineup : அருண் மாதேஸ்வரன் முதல் நெல்சன் வரை.. தனுஷுடன் இணையும் இயக்குநர்கள்..

அருண் மாதேஸ்வரன் முதல் நெல்சன் வரை அடுத்தடுத்த இயக்குநர்களுடன் தனுஷ் நடிக்க இருக்கும் படங்களைப் பார்க்கலாம்

 நடிகர் தனுஷ் நடிக்க இருக்கும் அடுத்தடுத்த படங்களைப் பார்க்கலாம்..

 தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் தனுஷ். தனது 50-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தனுஷ் அதோடு அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களையும் வரிசையில் வைத்திருக்கிறார்.

தனுஷ் நடிக்க இருக்கும் படங்களைப் பார்க்கலாம்

கேப்டன் மில்லர்

ராக்கி படத்தை இயக்கிய  அருண் மாதேஸ்வரன் இயக்கும் படம் கேப்டன் மில்லர். கதாநாயகியாக பிரியங்கா நடிக்க, கன்னட நடிகர் ஷிவ ராஜ்குமார் தனுஷின் சகோதரனாக நடிக்கிறார் இவர்களைத் தவித்து ஜான் கொக்கன், அந்தீப் கிஷன் உள்ளிட்டவர்களும் நடித்துள்ளார்கள். பீரியட் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  வருகின்ற டிசம்பர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது கேப்டன் மில்லர்.

D50

தனது 50-வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் தனுஷ். விஸ்வாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா சுரேந்திரன் இந்தப் படத்தில் சமீபத்தில் இணைந்தார். மேலும் இசையமைப்பாளர் தேவா இந்தப் பட த்தில் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் மற்றும் நித்யா மேனன் இந்தப் படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஏ.ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மூன்று சகோதரர்களை மையப்படுத்திய மிகப்பெரிய கேங்ஸ்டர் கதையான இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவேகத்தில் நடைபெற்று வருகிறது.

தெலுங்கு என்ட்ரி

 அடுத்ததாக தனுஷ் நடிக்க இருக்கும் படத்தை தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருக்கிறார். ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க நாகர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகிற்குள்  அடியெடுத்து வைக்க இருக்கிறார் தனுஷ்.

தேரே இஷ்க் மே

பாலிவுட்டில் ஆனந்த் எல் ராய் நடிப்பில் தனுஷ் நடித்த ராஞ்சனா மற்றும் அத்ரங்கி ரே ஆகிய இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் தேரே இஷ்க் மே. கியாரா அத்வானி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசைமைக்கிறார்.

மாரி செல்வராஜ் கூட்டணி

கர்ணன் படத்தின் மூலம் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மிகப்பெரிய வெற்றி கூட்டணியாக மாறினார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இணைய இருக்கிறது இந்த கூட்டணி. மிகப்பெரிய பீரியட் டிராமாவாக இந்தப் படம் இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

 மீண்டும் அருண் மாதேஸ்வரன்

கேப்டன் மில்லர் படம் வெளியாவதற்கு முன்பாகவே  தங்களது அடுத்த படத்தையும் தீர்மானித்து விட்டார்கள் அருண் - தனுஷ் கூட்டணி.

ஹெச் வினோத்

சதுரங்க வேட்டை , தீரன், துணிவு படங்களை இயக்கிய தற்போது உலகநாயகன் கமல்ஹாசனின் 233 ஆவது படத்தை இயக்கி வரும் எச் வினோத் தனது தனது அடுத்தப் படத்தை நடிகர் தனுஷுடன் இயக்க இருக்கிறார். இது குறித்தான கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

வடசென்னை 2

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும். தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வரும் வெற்றிமாறன் அதனைத் தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை  இயக்க இருக்கிறார்.

நெல்சன்

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நெல்சனின் அடுத்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும் நிலையில் தனுஷ் மற்றும் நெல்சனின் கூட்டணியைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
ஆட்சியே மாறியிருக்குமே! இத்தன லட்சம் வாக்குகள் எண்ணலயா? என்னய்ய சொல்றீங்க!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Anna Univiersity: ஞானசேகரன் அண்ணா பல்கலைக்கழகத்தின் உள்ளே வந்தது எப்படி? அமைச்சர் சொன்ன காரணம்!!
Annamalai: அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
அண்ணா பல்கலை. விவகாரம்; தன்னைத்தானே 8 முறை சாட்டையால் அடித்துக்கொண்ட அண்ணாமலை!- எழும் விமர்சனங்கள்!
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Embed widget