Nandita Das: 'கான் திரைப்பட விழா ஒன்றும் ஃபேஷன் ஷோ அல்ல..' நடிகை நந்திதா தாஸ் காட்டம்
சர்வதேச கான் திரைப்பட விழா திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நிகழ்வென்றும் அதனை பேஷன் நிகழ்வாக கருத வேண்டாம் என்று கூறியுள்ளார் நந்திதா தாஸ்.
76 ஆவது கான் திரைப்பட விழா பிரான்சில் நடைபெற்று வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் இங்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. பல்வேறு நாடுகளில் இருந்து இயக்குனர்கள், நடிகர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு வருகிறார்கள். கடந்த சில வருடங்களாக இந்தியத் திரைப்பட பிரபலங்கள் இந்த விழாவில் கலந்துகொள்வது அதிகரித்துள்ளது.
கான் திரைப்பட விழா:
இந்த ஆண்டும் இந்தியாவில் நடிகை குஷ்பு, இயக்குனர் விக்னேஷ் சிவன், சோனம் கபூர், ஈஷா குப்தா, மிருணால் தாகூர், ஊர்வஷி ராவ்டெலா ரிச்சா சட்டா என இன்னும் பல பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்த நட்சித்தரங்கள் அதுவும் குறிப்பாக நடிகைகள் என்ன மாதிரியான ஆடைகள் அணிந்து சென்றார்கள் என்பதே இணையதளத்தில் பேசுபொருளாய் இருந்து வருகிறது. மேலும் இந்த நிகழ்விற்கு ஒவ்வொரு நடிகர்களும் மிக சிரத்தை எடுத்து தங்களது ஆடைகளை தேவு செய்து அணிந்துவருகிறார்கள்.
இந்நிலையில் இயக்குனர் நந்திதா தாஸ் தனது கருத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். மாண்டோ, ஆகிய திரைப்படங்களின் மூலம் பரவலாக அறியப்படுபவர் நந்திதா தாஸ். கான் திரைப்பட விழாவிற்கு தொடர்ச்சியாக சேன்று வருபவர்.
பேஷன் ஷோ அல்ல:
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நந்திதா தாஸ் “இந்த ஆண்டு என்னால் கான் திரைப்பட விழாவில் பங்கெடுக்க முடியவில்லை. இந்த விழா முழுவதும் படங்களுக்கான ஒரு நிகழ்வு என்பதை மறந்துவிடுகிறார்கள். பலர் இதை ஒரு பல வகையான ஆடைகள் அணிந்து செல்லும் ஒரு பேஷன் நிகழ்வாக மட்டுமே கருதுகிறார்கள். இந்தத் திரைப்பட விழாவில் நான் எத்தனை வகையான படங்களை பார்த்திருக்கிறேன் உங்களுடன் நான் பகிர்ந்துகொள்ள முடியாது. ஆனால் இந்த நிகழ்விற்கு நான் சென்றிருந்த போது மிக எளிமையான சேலைகளை மட்டுமே அணிந்து சென்றிருக்கிறேன்.”
நந்திதா தாசின் இந்த விமர்சனம் பலரால் ஆமோதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால இதற்கு பதில் அளிக்கும் வகையில் பாலிவுட் நடிகை ரிச்சா சட்டா கருத்து தெரிவித்துள்ளார்.
கான் திரைப்பட விழாவில் அனைவரும் மிக சந்தோஷமாக கலந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வில் திரைப்படங்கள் மற்றும் செலிப்ரிட்டீஸ் அணியும் ஆடைகள் பற்றி நிறைய விவாதிக்கப்படுகிறது. ஆனால் அதற்காக யாரும் யாரையும் குறைய்வாக மதிப்பிட வேண்டாம். இந்த நிகழ்விற்கு வந்திருக்கும் சிலர் தங்களது படங்கள் சார்பாக வந்திருக்கிறார்கள் சிலர் இந்த விழாவை அனுபவிப்பதற்காகவும் மற்ற நிறுவனங்களுடன் தங்களது தொழில்ரீதியான வாய்ப்புகளை பெருக்கிக்கொள்ள வந்திருக்கிறார்கள்.
இங்கு அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அவர்களைப் பற்றி யாரும் குறைவாக பேச வேண்டாம் என்பதே எனது கருத்தாக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நடித்த மசான திரைப்படத்திற்காக முதக் முறையாக கான் திரைப்பட விழாவில் பங்கேற்றார். இந்த ஆண்டு ஒரு தயாரிப்பாளராக கான் திரைப்பட விழாவிற்ல் கலந்துகொண்டார்.