மேலும் அறிய

Judo Rathnam Passed Away: எம்.ஜி.ஆர் முதல் விஜய் வரை! காலமானார் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினம்..!

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம்(Judo Rathnam) உடல் நலக் குறைவால் காலமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார்

மூத்த சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ கே.கே. ரத்தினம்(Judo Rathnam) உடல் நலக் குறைவால் காலமானார். இவருக்கு வயது 93. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 1,500 திரைப்படங்களுக்கு மேலாக ஸ்டண்ட் மாஸ்டராக  பணிபுரிந்துள்ளார்.

குறிப்பாக தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி,கமல் ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜித் என  அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் சண்டை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். 

1959 ஆம் ஆண்டில் தாமரைகுளம் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர்,  அதன் பின்னர் 1966 ஆம் ஆண்டில் வல்லவன் ஒருவன் திரைப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமானார். அதன் பின்னர் 1500 படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.  இறுதியாக தலைநகரம் திரைப்படத்தில்  நடிகராக நடித்து இருந்தார். 

இவரது சிஷ்யர்கள்

இவரிடம் சூப்பர் சுப்பராயன் , ராம்போ ராஜ்குமார், எஃப்இஎஃப்எஸ்ஐ விஜயன், தளபதி தினேஷ் , ஜாகுவார் தங்கம்  , பொன்னம்பலம் , ஜூடோ. கே.கே.ராமு, இந்தியன் பாஸ்கர், ராஜசேகர், அம்பூர். ஆர்.எஸ். பாபு மற்றும் எம். ஷாஹுல் ஹமீத் அவருக்கு போராளிகளாகவும் உதவியாளர்களாகவும் பணியாற்றியுள்ளனர். 

அவரது மகன் ஜூடோ. கே.கே.ராமுவும் ஒரு ஸ்டண்ட் மாஸ்டர் ஆவார். அவரது பேரன்கள் ஜூடோ லெனின் மற்றும் ஜான் பிரின்ஸ் ஆகியோரும் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் படங்களில் ஸ்டண்ட் செய்து வருகிறார்கள். 

இவர் நடிகராக நடித்த படங்கள்

1959ஆம் ஆண்டு  தாமரைக்குளம் என்ற படத்தில் அறிமுகமான இவர், அதன் பின்னர் சில கால இடைவேளையில், கொஞ்சம் குமரி (1963),  காயத்ரி (1977), போக்கிரி ராஜா (1982 ), நாணயமில்லாத நாணயம் (1984 ), பொண்ணுக்கேத்த புருஷன் (1992 ) ஆகிய படங்களில் நடித்த இவர் இறுதியாக கடந்த 2006ஆம் ஆண்டு சுந்தர் சி நடித்த தலைநகரம் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.  அதன் பின்னர் அவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. 

இவர் தயாரிப்பில் உருவான படம்

சினிமாவில் நடிகராகவும் , ஸ்டண்ட் மாஸ்டராகவும் இருந்த இவர் 1980அம் ஆண்டு  ஒத்தையாடி பாதையிலே எனும் படத்தினை தயாரித்தும் உள்ளார். இதன் பின்னர் அவர் எந்த படத்தையும் தயாரிக்கவில்லை. 

இவர் பெற்ற விருதுகள்

1200 க்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டண்ட் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி உலக சாதனை படைத்ததற்காக  2013ஆம் ஆண்டு  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். இவருக்கு கடந்த 2016ஆம் ஆண்டு சங்கரதாஸ் சுவாமிகள் விருது வழங்கப்பட்டது . அதேபோல் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கலைமாமணி விருது வழங்கி கௌரவித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget