மேலும் அறிய

Mike Batayeh passes away: பிரேக்கிங் பேட் சீரிஸ் நடிகர் திடீர் மரணம்... சோகத்தில் ரசிகர்கள்.. என்ன நடந்தது?

பிரபல வெப் சீரிஸ் தொடரான பிரேக்கிங் பேட் தொடரில் நடித்த நடிகர் மைக் படாயே திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2008 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை 62 எபிசோட்களாக ஒளிபரப்பான பிரேக்கிங் பேட் வெப் சீரிஸில் லாவண்டேரா பிரில்லேண்டே தொழில் துறையின் மேலாளரான டென்னிஸ் மார்கோவ்ஸ்கி  என்னும் கேரக்டரில் அவர் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்கன் ட்ரீம்ஸ் மற்றும் டெட்ராய்ட் அன்லீடட் உள்ளிட்ட பல திரைப்படங்களிலும், தி பெர்னி மேக் ஷோ மற்றும் சிஎஸ்ஐ: மியாமி போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மைக் படாயே நடித்துள்ளார், 

மேலும் எக்ஸ்-மென்: டேஸ் ஆஃப் ஃபியூச்சர் பாஸ்ட் படத்தில் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இவர் பணியாற்றியுள்ளார்.
மைக் படாயே கடைசியாக 2018 ஆம் ஆண்டு தொலைக்காட்சி திரைப்படமான பிராங்க் ஆஃப் அமெரிக்காவில் நடித்திருந்தார். ஒரு நகைச்சுவை நடிகராக, படாயே அமெரிக்காவின் மத்திய கிழக்கில் பல நிகழ்ச்சிகளை நடத்தி.யுள்ளார். ஜோர்டான் அரச குடும்பத்தின் அழைப்பின் பேரில் அதன் தலைநகரான அம்மானில் நடைபெற்ற காமெடி ஷோ ஒன்றையும் நடத்தியுள்ளார். 

52 வயதான மைக் படாயே தனது மிச்சிகன் வீட்டில் வசித்து வந்தார். அவர் தூக்கத்தில் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக மைக்கின் சகோதரிகள் தெரிவித்துள்ளனர். அவரது இறுதிச் சடங்கு ஜூன் 17 அன்று மிச்சிகனில் உள்ள பிளைமவுத்தில் உள்ள ரைசன் கிறிஸ்ட் லூத்தரன் தேவாலயத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக் படேயின் மரணம் மிகவும் அதிர்ச்சியளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காரணம் அவருக்கு இதயநோய் இருந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இதற்கு முன் தென்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். தனது திறமையால் ரசிகர்களிடையே ஒரு காமெடி நடிகராக சிரிப்பை ஏற்படுத்திய மைக் படாயேயின் மரணம் நிச்சயம் பேரிழப்பு என அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!

Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்

ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு

நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ambedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்”என்னை கொல்ல போறாங்க” தலையில் கட்டுடன் சி.டி.ரவி! தட்டித் தூக்கிய POLICE”வெட்கமா இல்லையா ராகுல்” சுற்றிவளைத்த MP-க்கள்! கூலாக பதில் சொன்ன ராகுல்Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Chennai Food Festival 2024: மெரினாவில் தொடங்கிய உணவுத் திருவிழா; 100+ உணவுகள், அனுமதி இலவசம்- மெனு லிஸ்ட்!
Viduthalai 2 Review:  வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
Viduthalai 2 Review: வெற்றிமாறனின் விடுதலை 2 முழு விமர்சனம்
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..?  ராம்கோபால் வர்மா பரபரப்பு
ஶ்ரீதேவியை கைது செய்ய சொர்கத்துக்கு போவார்களா..? ராம்கோபால் வர்மா பரபரப்பு
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எப்படி பார்க்கிறீர்கள்? - முதல்வர் ஸ்டாலின் சொன்ன நச் பதில்
TN Rain: இப்போ, காற்றழுத்தம் எங்கே இருக்கு.! தமிழ்நாட்டுக்கு மழை வருமா, வராதா?

மாணவர்களே.. வெளியான தமிழ் திறனாய்வு தேர்வு முடிவுகள்! யாருக்கெல்லாம் மாதம் ரூ.1500?

TNPSC Group 2: குரூப் 2 தேர்வர்களே.. தேர்வு தேதி, மையம், தேர்வு முறையில் முக்கிய மாற்றம்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

TVK Vijay : ”ஈரோடு இடைத் தேர்தல் குறித்து முக்கிய முடிவு எடுத்தார் விஜய்” விரைவில் வெளியாகிறது அறிவிப்பு..!

Embed widget