Brahmastra Box Office : முதல் நாளை விட கூடுதல் கலக்ஷனை அள்ளிய பிரம்மாஸ்திரா! எவ்வளவு தெரியுமா?
Brahmastra Box Office Collection Day 2: நெகடிவ் பிரொமோஷனை பிரம்மாஸ்திரமாக பயன்படுத்திய பிரம்மாஸ்திராவின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்ஷென் இதுதான்!
பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகியுள்ள பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயன் முகர்ஜி இயக்கத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா, மௌனி ராய், சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் “பிரம்மாஸ்திரா”. 3 பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் 2019-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் 2020-ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என கூறப்பட்டது. அப்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டதால் கடைசியாக வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு கடந்த வெள்ளிக்கிழமை அன்று உலகம் முழுவதும் வெளியானது.
View this post on Instagram
ஏற்கனவே பாலிவுட் படங்கள் புறக்கணிப்பு கலாச்சாரம் ஒருபுறமிருக்க, மறுபுறம் பெரிய ஹீரோக்களின் படங்களின் தோல்வி பாலிவுட் திரையுலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 410 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இந்தி சினிமாவின் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இதனால் பிரம்மாஸ்திரா மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது
View this post on Instagram
இந்நிலையில் பிரம்மாஸ்திரா திரைப்படம் உலகம் முழுவதும் முதல் மற்றும் இரண்டாவது நாளில் ரூ. 160 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக நெகடீவ் ப்ரொமோஷனை இப்படம் பெற்றுவருகிறது. அதனால் முதல் நாளை விட இரண்டாவது
நாளில் கூடுதல் கலெக்ஷனை அள்ளியுள்ளது. இப்படம், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாயை வசூலித்தது.