Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
பிரபல நடிகை அமலாபால் கடுமையான வெயில் நேரத்தில் கேரவனில் உட்கார அனுமதிக்காமல் கீழே இறக்கிவிட்டதாக பிரபல ஒப்பனை கலைஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
![Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு bollywood make up artist blame actress amala paul know the details Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/01/edc5bef3196c72547b65efac30dd83141719810784263102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலாபால். வீரசேகரன் என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமான அவர், மைனா படம் மூலமாக தமிழ்நாட்டின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார். விக்ரம், விஜய், தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்தும் அசத்தியுள்ளார்.
கேரவன் தராத அமலாபால்:
இந்த நிலையில், பாலிவுட் திரையுலகின் பிரபல ஒப்பனை கலைஞர் ஹேமா நடிகை அமலாபால் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார். அவர் இதுதொடர்பாக கூறியிருப்பதாவது,
“சென்னையில் நடிகை அமலாபாலுடன் படப்பிடிப்புக்குச் சென்றேன். அந்த படப்பிடிப்பு ஏப்ரல், மே மாதம் நடைபெற்றது. கடுமையான வெயிலில் அந்த படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் நிழலில் ஒதுங்குவதற்கு ஒரு செடியோ, மரமோ கூட இல்லை.
இதனால், மிகுந்த சிரமத்திற்கு ஆளான நாங்கள் அமலாபாலின் கேரவனுக்குள் சென்று அமர்ந்து கொண்டோம். ஆனால், நான் சென்று உட்கார்ந்த உடனே, நடிகை அமலாபால் அவருடைய மேலாளரை அழைத்தார். அவரிடம் கூறி என்னை வேனை விட்டு வெளியே செல்லுமாறு கூறினார். நானும் என்னுடன் பணியாற்றுபவர்களும் அங்கு உட்கார்ந்து இருந்தோம்.
நிறைய சம்பவங்கள்:
இவ்வளவு கடுமையான வெயிலில் எங்கு போவது? எங்கு சென்று நிற்பது? என்று யோசித்தோம். ஆனால், அவர்கள் நாங்கள் இறங்கும் வரை அவர் விடவே இல்லை. அதனால், வேனை விட்டு இறங்கினோம். இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு நிறையவே நடைபெற்றன.
பாலிவுட்டின் பிரபல நடிகையான தபு போன்ற பெரிய நடிகைகளுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளோம். எங்களைப் போன்றவர்களுக்காக தபு, எங்களுக்கு வேன் புக் செய்து நன்றாக பார்த்துக் கொள்வார்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். நடிகை அமலாபால் மீது பாலிவுட் பெண் ஒப்பனை கலைஞர் சரமாரியாக குற்றம் சாட்டியிருப்பது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான அமலாபாலுக்கு கடந்த மாதம்தான் குழந்தை பிறந்தது. அமலாபால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக கடாவர் என்ற வெப் சீரிஸில் நடித்திருந்தார். மலையாளத்தில் கடைசியாக ஆடுஜீவிதம் படத்தில் பிரித்விராஜ் ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார். தற்போது லெவல் கிராஸ், ட்விஜா ஆகிய மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க: Vetrimaran: என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வெற்றிமாறன்! கைகொடுத்து காப்பாற்றிய மனைவி ஆர்த்தி!
மேலும் படிக்க: Kamalhaasan: எந்திரன் படத்தில் ஏன் நடிக்கவில்லை? உலகநாயகன் கமல் சொன்ன காரணம்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)