`திரைக்கதையை மாற்றும் சுதந்திரம் பிடித்திருக்கிறது!’ - `கெஹ்ரய்யான்’ திரைப்படம் குறித்து தீபிகா படுகோனே!
இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய தீபிகா படுகோனே, இயக்குநர் ஷகுன் பத்ராவின் பணியாற்றும் முறை, சஞ்சய் லீலா பன்சாலியிடம் இருந்து வேறுபடுவதாகத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு நடிகை தீபிகா படுகோனேவுக்கு மிக முக்கியமான ஆண்டாக இருக்கிறது. ஹ்ரித்திக் ரோஷனுடன் `ஃபைட்டர்’, பிரபாஸுடன் `ப்ராஜக்ட் கே’, ஷாரூக் கானின் `பதான்’ ஆகிய திரைப்படங்களுடன் மேலும் பல்வேறு திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், `தி இண்டெர்ன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தை ரீமேக் செய்து நடிப்பதுடன் தயாரிக்கவும் உள்ளார் தீபிகா படுகோனே.
இந்நிலையில், இயக்குநர் ஷகுன் பத்ரா இயக்கியுள்ள `கெஹ்ரய்யான்’ திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இந்தத் திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியுடன் இணைந்து மூன்று திரைப்படங்களில் பணியாற்றிய தீபிகா படுகோனே, இயக்குநர் ஷகுன் பத்ராவின் பணியாற்றும் முறை, சஞ்சய் லீலா பன்சாலியிடம் இருந்து வேறுபடுவதாகத் தெரிவித்தார். மேலும், ஷகுன் பத்ராவின் படப்பிடிப்பில் பங்கேற்பவர் யாரும் சஞ்சய் லீலா பன்சாலியின் திரையுலகத்திற்குள் நுழையும் தகுதி பெற்றவர்கள் எனவும் கூறியுள்ளார்.
`ஷகுன் பத்ராவுடன் இணைந்து பணியாற்றினால், எளிதாக சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் பணியாற்ற முடியும். ஏனெனில் ஷகுன் பத்ராவைத் திருப்திப்படுத்தவே முடியாது. நான் இதனை முறையிடவில்லை. ஆனால் அவருடைய பணியாற்றும் முறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைந்தது முதல் கிளம்புவது வரை, நடிகர்களால் உட்காரவே முடியாது; உணவு இடைவேளை மட்டுமே விதிவிலக்காக கிடைக்கும்’ எனக் கூறியுள்ளார் தீபிகா படுகோனே.
View this post on Instagram
தொடர்ந்து பேசிய தீபிகா படுகோனே, இயக்குநர்கள் சஞ்சய் லீலா பன்சாலி, ஷகுன் பத்ரா ஆகிய இருவரும் தங்கள் திரைக்கதைகளில் மாற்றம் செய்ய தீபிகாவுக்கு சுதந்திரம் அளித்ததாகக் கூறுகிறார். `என் வசனங்களில் சிலவற்றை மாற்றுவதற்காக நான் பென்சில் பயன்படுத்துவேன். சில எழுத்தாளர்களுக்கு அது பிடிக்காது. தாங்கள் எழுதும் வசனங்களைத் திருமணம் செய்துகொண்டவர்களைப் போல நடந்துகொள்வார்கள். நம்மால் எதுவும் மாற்ற முடியாது. உதாரணத்திற்குக், கபீர் கானின் கதைகள். அதே ஷகுன் பத்ராவும், சஞ்சய் லீலா பன்சாலியும் கதையின் ஆன்மாவை உள்வாங்குவதற்காக வசனங்களை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டவர்கள்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தீபிகா படுகோனே, அனன்யா பாண்டே, தைரியா கர்வா, சித்தாந்த் சதுர்வேதி முதலான நடிகர்கள் நடித்துள்ள `கெஹ்ரய்யான்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 11 முதல் அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் வெளியாகிறது.