Deepika Padukone : உளகளவில் பேசப்படும் தீபிகா படுகோன்! தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் சந்தித்த தாக்குதல்கள் என்ன?
Deepika Padukone : தீபிகா சந்தித்து வந்த அச்சுறுத்தல்கள், குற்றச்சாட்டுககளை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை பொறுத்தே பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஒரு நட்சத்திரமாக அடையாளம் காணப்படுகிறார்.
பாலிவுட் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோன் மற்றவர்களிடம் இருந்து வேறுபட்டு காணப்படுவதற்கான காரணம் அவர் தன்னை சுற்றி நடக்கும் விஷயங்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதில் தான் அடங்கியுள்ளது. அது தான் அவரை ஒரு நடிகராக இல்லாமல் ஒரு நட்சத்திரமாக வடிவமைத்துள்ளது.
இம்தியாஸ் அலியின் தமாஷாவில், ரன்பீர் கபூர் மற்றும் தீபிகா படுகோன் ஹெட்ஃபோன்களை மாட்டிக்கொண்டு கோர்சிகாவில் உல்லாசமாக ஏ.ஆர். ரஹ்மானின் பாடலுக்கு உலகை மறந்த நடனமாடுகிறார்கள். உண்மையிலேயே தீபிகாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் இதேபோல தான் உள்ளது. அவரை சுற்றி நடக்கும் சர்ச்சைகள், தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல்களை இசையாக மாற்றி அதை அமைதியுடன் கடந்து செல்கிறார்.
ஆலியா பட் தவிர கடந்த 10 ஆண்டுகளில் அறிமுகமான நடிகைகளை ஒப்பிட்டு பார்க்கையில் தீபிகா படுகோன் ஒரு வலுவான அடையாளத்தை முத்திரை பதித்துள்ளார். இது அவருடைய பிளாக் பஸ்டர் படங்கள், தலைசிறந்த இயக்குனர்களின் படங்கள், மீடியம் பட்ஜெட் படங்கள் பற்றியது அல்ல. பல ஆண்டுகளாக அவர் சந்தித்து வந்த அச்சுறுத்தல்கள், குற்றச்சாட்டுகள், தீர்ப்புகள் உள்ளிட்டவற்றை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதை பொறுத்தே பார்வையாளர்கள் மத்தியில் அவர் ஒரு நட்சத்திரமாக அடையாளம் காணப்படுகிறார்.
2007ம் ஆண்டு 'ஓம் சாந்தி ஓம்' படத்தில் தொடங்கிய அவரின் பயணம் இன்று வரை பல வளர்ச்சிகளை தாக்குதலை கண்டுள்ளது. அதிலும் குறிப்பதாக பிரபலமான இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் 'பத்மாவத்'. படத்தில் ராணி பத்மாவதியாக தீபிகா நடித்ததற்காக பல வகையில் எதிர்ப்புகளை சந்தித்தார். பாஜக தலைவர் ஒருவர் தீபிகா மற்றும் பன்சாலியின் தலைக்கு 10 கோடி பரிசாக தருவதாக அறிவிப்பை விடுத்தார். இது அனைத்தையும் பொறுமையுடன் எதிர்கொண்ட தீபிகா அதை பார்த்து சிறிதும் பயப்படவில்லை என தெரிவித்தார். படத்தை வெளியிட கூடாது என பல்வேறு எதிர்ப்புகள், வன்முறை எல்லாம் வெடித்தது. இறுதியாக ஒரு மாத கால இடைவெளிக்கு பிறகு பத்மாவத் திரைப்படம் வெளியானது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 'சபக்' திரைப்படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் புரமோஷனுக்காக டெல்லி சென்ற இடத்தில் ஜேஎன்யு மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே போராட்டத்தை நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் இணையத்தில் ஒரு பேசுபொருளாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. ஜேஎன்யு மாணவர்களைச் சந்தித்து அவர்களுக்கு தீபிகா ஆதரவு தெரிவித்ததால் போராட்ட களம் சூடுபிடித்தது. அதனால் கோபமடைந்த ஆர்எஸ்எஸ்காரர்கள் சமூக வலைத்தளங்களில் தீபிகாவை டேமேஜ் செய்யும் வகையில் அவரின் புகைப்படங்களை மீம்ஸ்களாக்கி வைரலாக்கினர். இது தீபிகாவின் தைரியத்தையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியது.
அதை தொடர்ந்து நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கில் போதைப்பொருள் கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டபோது அது தொடர்பாக தீபிகா விசாரணைக்காக வரவழைக்கப்பட்டார். மேலும் பதான் படத்தில் இடம் பெற்ற " பேஷரம் ரங் " பாடலின் சர்ச்சையில் சிக்கினார். இந்த இரு சம்பவங்கள் மூலமும் தீபிகாவின் இமேஜை டேமேஜ் செய்வதற்காக நடத்தப்பட்டது.
பத்மாவத் மற்றும் ஜேஎன்யு சர்ச்சைகள், தீபிகாவை எந்த அளவு பாதித்தது என்பது குறித்து டைம் இதழுக்கு அவர் பதில் அளிக்கையில் "நான் அதைப் பற்றி ஏதாவது யோசிக்க வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உண்மை என்னவென்றால், நான் அதைப் பற்றி எதுவும் சிந்திக்கவில்லை" என புத்திசாலித்தனமாக பதிலளித்து இருந்தார். ஒருவரின் நடத்தை தான் அவர்களை ஸ்டார்களாக மாற்றும் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருக்கிறார் தீபிகா படுகோன்.