மேலும் அறிய

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

நடிகை ஆலியா பட் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பது எளிதல்ல என்றும், எப்போதும் கண்காணிக்கப்படுவதும், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனைவரின் பேச்சுகளும் தன்னை அவ்வபோது திணறடிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

`கங்குபாய் கதியாவாடி’ திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடி வருகிறார் பாலிவுட் நடிகை ஆலியா பட். வெளியான முதல் வார இறுதி நாள்களிலேயே சுமார் 38.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. பாலிவுட் நடிகை ஆலியா பட் அனைவரும் அறிந்த நடிகராக இருப்பது எளிதல்ல என்றும், எப்போதும் கண்காணிக்கப்படுவதும், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அனைவரின் பேச்சுகளும் தன்னை அவ்வபோது திணறடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

`கங்குபாய் கதியாவாடி’ திரைப்பட வெளியீட்டிற்குப் பிறகு, செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் நடிகை ஆலியா பட்டிடம், அவரது வாழ்க்கை குறித்து மக்கள் தெரிந்துகொள்ள விரும்புவது அவருக்குப் பிரச்னையாக இருக்கிறதா எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை ஆலியா பட், `ஆம். ஆனால் அப்போது தோன்றும் போதெல்லாம், `நான் ஏன் நடிகையாக இருக்கிறேன்?’ எனத் தோன்றும். பொது வாழ்க்கையில் இருந்தால், வாழ்க்கையில் நிகழ்பவை பொதுவாகவே இருக்கும். அதனாலேயே பலரும் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதுகாக்க முயல்கின்றனர்’ எனக் கூறியுள்ளார். 

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

தற்போது பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் காதல் உறவில் இருக்கும் நடிகை ஆலியா பட், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைவாக வைத்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய நடிகை ஆலியா பட், `நான் எப்போது திருமணம் செய்து கொள்வேன் என்ற விவரங்களையோ, எனது மதிய உணவுக்காக எங்கு செல்கிறேன் என்ற விவரங்களையோ பிறருக்குத் தருவதில் எனக்கு உடன்பாடு இல்லை. அது பிறருக்குத் தேவையும் இல்லை. ஆனால் பிறர் அதனைப் பற்றி பேசுவதும், பூதாகரமாக்குவதுமாக இருப்பதால் என்னால் அதனைக் குறித்து எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன்’ எனக் கூறியுள்ளார். 

இந்த 2022ஆம் ஆண்டுடன் தனது திரைப்பயணத்தின் பத்தாவது ஆண்டை முடிக்கிறார் நடிகை ஆலியா பட். கரண் ஜோஹர் இயக்கிய `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர்’ திரைப்படத்தின் மூலமாக பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை ஆலியா பட். தொடர்ந்து, தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக, `ஹைவே’, `ஹம்டி ஷர்மா கி துல்ஹனியா’, `உட்தா பஞ்சாப்’, `டியர் ஸிந்தகி’, `ராஸி’, `கல்லி பாய்’ முதலான திரைப்படங்களில் முன்னணி வேடங்களில் நடித்துள்ளார் ஆலியா பட். 

`தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பேச்சுகள் திணறடிக்கின்றன!’ - மனம் திறக்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட்!

பிரபல பாலிவுட் இயக்குநர் மகேஷ் பட், பாலிவுட் நடிகை சோனி ராஸ்தான் ஆகியோரின் மகளான ஆலியா பட், தன்னுடைய திரைப்பயணம் குறித்து கூறும் போது, `நான் ஒரு நடிகராகவும், மனிதராகவும் பரிணாமம் அடைந்திருக்கிறேன் என நினைக்கிறேன். எதையேனும் நிருபிக்க எல்லா இடங்களில் ஓடிக் கொண்டே இருந்தேன்’ எனக் கூறுகிறார். 

28 வயதான நடிகை ஆலியா பட் தற்போது தன்னை மகிழ்விக்கும் பணிகளைச் செய்வதாகத் தெரிவித்துள்ளார். `என் மீது அதிக அழுத்தம் இல்லை. அழுத்தம் இருப்பது மகிழ்ச்சியான ஒன்று இல்லை. இது ஒரு போட்டி அல்ல. கலையை வெளிப்படுத்தும் ஊடகம் இது. உங்களுக்குள் இருக்கும் கற்பனை சக்தியைத் திருப்திப்படுத்திவிட்டு, அடுத்த படத்திற்கு நகர வேண்டும். சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்றிய பிறகு, நடிப்பு மீதான எனது அணுகுமுறை மாறியுள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
மொத்தமாக மாறிய ஆந்திரா அரசியல்! நடிகர் விஜய்யை பார்த்து ஜூனியர் என்.டி.ஆர் எடுத்த அதிரடி முடிவு!
National Awards: தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
தேசிய விருதா? சோப்பு டப்பாவா? புரட்டி எடுக்கும் நெட்டிசன்ஸ், என்ன இருக்குன்னு இதுக்குலா அவார்ட்?
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
கரூர் விவகாரத்தில் விஜயை குறை சொல்ல அழுத்தம்.. திமுக மீது துரை வைகோ குற்றச்சாட்டு!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Sathyaraj: எத்தனை நாளுக்கு கொடி பறக்குதுன்னு பார்ப்போம்.. தவெகவை வம்பிழுத்த சத்யராஜ்!
Tamil Nadu Power Shutdown: தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
தமிழகத்தில் நாளை (20-07-2026) மின் தடை இடங்கள் அறிவிப்பு: எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் இருக்காது?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... தற்போதைய நிலை என்ன?
சென்னை திரும்புபவர்கள் கவனத்திற்கு! திருச்சி - சென்னை NH-இல் திடீர் முடக்கம்... நிலை என்ன?
Embed widget