Watch Video | களைகட்டிய AP Dhillon’s கச்சேரி.. விசில்பறந்த ரன்வீர் சிங்-அலியா பட் டான்ஸ் (வைரல் வீடியோ)
டெல்லியில் ஆல்யா மற்றும் ரன்வீர் சிங் இணைந்து நடிக்கும் Aur Rani Ki Prem Kahani படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், சற்று ரிலாக்ஸாக குருகிராமில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் AP Dhillon’s இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு, மக்கள் மத்தியில் உற்சாகமாக அலியாபட் மற்றும் ரன்வீர்சிங் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்த நிலையில் சினிமா படப்படிப்பு கடந்த சில மாதங்களாகவே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆல்யா மற்றும் ரன்வீர் சிங் இணைந்து நடிக்கும் Aur Rani Ki Prem Kahani படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுவரும் நிலையில், சற்று ரிலாக்ஸாக குருகிராமில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
AP Dhillon’s என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் இந்தியப் பிரபல பாடகரான அம்ரித்பால் சிங் தில்லானின் இசை நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ராப்பர், பாடலாசிரியர் மற்றும் பஞ்சாபி இசையில் வெளுத்துக்கட்டும் இவர்கென்றே தனி ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது இசை கச்சேரியில் கலந்துகொண்டால் நிச்சயம் ஆடாமல் யாருமே இருக்க முடியாது. அந்தளவிற்கு நம்மையே பிரமிக்கவைக்ககூடிய இசைதான் AP Dhillon’s உடையது.
View this post on Instagram
இப்படி மிகவும் பிரபலமான AP Dhillon’s இசை கச்சேரியில் கலந்துகொண்ட அலியா பட் மற்றும் ரன்வீர் சிங் மிகவும் உற்சாகத்துடன் நடனமாடி ரசித்தனர். இது தொடர்பான 2 வீடியோக்கள் இணையத்தில் வைரலாகிறது. முதல் வீடியோவில், பொதுமக்களுக்கு மத்தியில் இசை கச்சேரியை ரசித்தனர். மேலும் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு பெண் போலீசாருக்கு உதவினர். இதனைத்தொடர்ந்து இசை கச்சேரியை ரசித்த வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.
View this post on Instagram
மற்றொரு வீடியோவில் ஆலியா,பார்த்து ஆச்சரியப்பட்ட சந்தோசத்தில் அழுத ரசிகைக்கு வாழ்த்துக்களை பகிர்ந்த வீடியோவும் இன்ஸ்டாவில் வைரலாகிறது. இன்ஸ்டாவில் இதனைப்பார்த்த ரசிகர்கள் பல்வேறு கமெண்டுகளைப் பதிவிட்டுவருகின்றனர். மேலும் ஆல்யா மீதான அன்பைப் பகிரும் பல ஈமோஜிகளையும் சோஷியல் மீடியாவில் வைரலாகிவருகிறது.