Ponniyin Selvan: ரிலீஸ் ஆகும் முன் பொன்னியின் செல்வன் படத்தை வம்புக்கு இழுத்த ப்ளூ சட்டை மாறன்!
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது.
பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன் தொடர்பான வீடியோ ஒன்றை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.
கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
View this post on Instagram
பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். முன்னதாக கடந்த சனிக்கிழமை படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை கிட்டதட்ட ரூ.5 கோடிக்கான வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் எங்கு பார்த்தாலும் பொன்னியின் செல்வன் குறித்த பேச்சுக்கள் தான் காணப்படுகிறது. இதனிடையே படக்குழுவினர் கேரளா, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி ஆகிய இடங்களுக்கு சென்று படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டனர். இதனிடையே சமீபகாலமாக சினிமா துறையினருடன் கருத்து மோதலில் ஈடுபட்டு வரும் விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் - Suhashini at PS 1 Promo event in Andhra. pic.twitter.com/zUiML3IAuh
— Blue Sattai Maran (@tamiltalkies) September 27, 2022
அதில் ஹைதராபாத் ப்ரோமோஷனில் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினி பேசும் வீடியோ இடம் பெற்றுள்ளது. அந்நிகழ்ச்சியில் பேசும் அவர், “பொன்னியின் செல்வன் படம் ஒரிஜினல் தமிழ் கதையாக இருந்தாலும் அதன் ஷூட்டிங் 10 நாட்கள் மட்டுமே நடந்தது. மீதமுள்ள ஷூட்டிங் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தான் நடந்தது. அதனால் இது உங்கள் படம். இந்த படத்தை வெற்றிப் பெற செய்ய வேண்டும்” என தெலுங்கு ரசிகர்களிடம் சுஹாசினி பேசியுள்ளார்.
இதனை பதிவிட்டு, பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் - Suhashini at PS 1 Promo event in Andhra என தெரிவித்துள்ளார். இதன்மூலம் ப்ளூ சட்டை மாறன் தனது அடுத்த பஞ்சாயத்தை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் படத்தின் ப்ரோமோஷனுக்காக செல்லும் போது அம்மாநில ரசிகர்களை கவர இதுபோன்று சொல்வது வாடிக்கை தான் எனவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.