(Source: ECI/ABP News/ABP Majha)
AK-க்கு எதிராக கருத்துக்கணிப்பு நடத்திய புளூசட்டை மாறன் - அப்செட்டில் அஜித் ரசிகர்கள்
அஜித்துக்கு எதிராக டிவிட்டரில் கருத்துக்கணிப்பு நடத்திய புளூசட்டை மாறன் - ரிசல் இப்படி வந்ததால் அஜித் ரசிகர்கள் அப்செட்
விளம்பரமே பிடிக்காது என்று கூறும் அஜித் வேண்டுமென திட்டமிட்டு விளம்பரத்துக்காக தந்து புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறாரா என புளூ சட்டை மாறன் கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளார்.
துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சியில் நடித்து வரும் அஜித் குமார், அடிக்கடி காஷ்மீர், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பைக் ரேஸ் சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். அண்மையில் நேபாளத்திற்கு பைக்கில் அஜித் சென்ற புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலானது. சமீப காலமாக அஜித்தின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து டிரெண்டாக்கி வருகின்றனர். பொதுவாக விளம்பரமே தனக்கு பிடிக்காது என கூறி வரும் அஜித், தன்னை தல என அழைக்க வேண்டாம் என்றும், ஏகே அல்லது அஜித் குமார் என்று அழைக்குமாறு ரசிகர்களை கேட்டு கொண்டார். திரைப்படத்தின் இசைவெளியீடு, டீசர் ரிலீஸ், செய்தியாளர் சந்திப்பு உள்ளிட்ட புரோமோஷன் நிகழ்ச்சிகளை தவிர்த்து வரும் அவர், விருது வழங்கும் விழாக்களையும் புறக்கணித்து வருபவர்.
அப்படி இருக்கும்போது, அவர் செல்லும் இடங்களில் விமான நிலையம், சாலை, டீக்கடைகளில் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவதால், விளம்பரத்துக்காக இந்த புகைப்படுகிறதா..? தனக்கு தெரிந்தும் புகைப்படங்களை வைரலாக்க அஜித் அனுமதிக்கிறாரா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இந்த நிலையில், அஜித் விளம்பரத்துக்காக சோஷியல் மீடியாவை பயன்படுத்துகிறாரா என்ற கருத்துக்கணிப்பில் புளூ சட்டை மாறன் இறங்கியுள்ளார்.
Thala publicity - Poll Result:
— Blue Sattai Maran (@tamiltalkies) July 8, 2023
People are always smart. Hope you understand it Thala. pic.twitter.com/hQot55Z0hf
திரைப்படங்களை விமர்சித்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கும் புளூ சட்டை மாறன், அஜித் விளம்பரத்தை விரும்புகிறாரா என இணையத்தில் கருத்துக்கணிப்பு நடித்துள்ளார். அதில், அஜித் தொடர்பான புகைப்படங்கள் பகிரப்படுவது திட்டமிட்ட விளம்பரம் என 63.3 சதவீதத்தினரும், எதேச்சையான சம்பவம் என 36.7 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். தல பப்ளிசிட்டி என்ற பெயரில் புளூ சட்டை மாறன் நடத்திய கருத்து கணிப்புக்கு சிலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.