மீசையில் மண்ணு ஓட்டாத மாதிரி பேசிய நயினார் நாகேந்திரன்..த்ரிஷா பற்றி பேசியதற்காக வருத்தம்
த்ரிஷா பற்றி தான் பேசிய கருத்து பெரியளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ளா பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

"விஜய் முதலில் த்ரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்" என்கிற நயினார் நாகேந்திரனின் கருத்து தமிழ்நாடு அரசியல் களத்தில் பெரியளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. நயினாரின் கருத்திற்கு கண்டனம் தெரிவித்து நடிகை த்ரிஷா அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து தனது கருத்திற்கு நயினார் நாகேந்திரன் வருத்தம் தெரிவித்துள்ளார்
வருத்தம் தெரிவித்த நயினார் நாகேந்திரன்
" என்னுடைய அரசியல் வாழ்க்கையைப் பொறுத்தமட்டிலும் எந்த ஒரு தனி நபர் விமர்சனத்தை நான் அனுமதிப்பதும் இல்லை பேசியதும் இல்லை. அன்று நான் பேசியது வாய் தவறி வந்த வார்த்தை. இதற்காக எங்களது அகில இந்திய தலைவி வானதி ஶ்ரீனிவாசன் என்னிடம் இது பற்றி பேசினார்கள். முன்னாள் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமை அவர்களும் இது பற்றி என்னிடம் பேசினார். உண்மையில் நான் பேசிய கருத்து யாரையேனும் புண்படுத்தி இருந்தால் அதற்காக நான் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்
நடிகை த்ரிஷா கண்டனம்
நயினார் நாகேந்திரனின் கருத்திற்கு த்ரிஷாவின் வழக்கரிஞர் சார்பாக கண்டன அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் " அரசியல் கருத்துக்களை பொறுத்தவரை தான் எப்போதும் நடுநிலையாகவே இருந்து வருகிறேன். தனது துறையை தவிர்த்து வேறு எந்த அரசியல் கட்சியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசுவதை தான் விரும்பவில்லை என்றும் ஒரு கட்சியின் முக்கிய பதவியில் இருக்கும் ஒருவர் இந்த மாதிரியான கருத்துக்களை பேசுவது ஏமாற்றமளிக்கிறது என்று த்ரிஷா தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.























