M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Applications for M.Ed. Admission : அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட். (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 அன்று முதல் தொடங்கும்-என உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கல்விக்கு முக்கியத்துவம்
தமிழகத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் துவக்கப்பள்ளி முதல் உயர் கல்வி வரை மாணவர்களுக்கான திட்டங்களும் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் மூலமாக தமிழகத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு கல்வியியல் கல்லூரியில் எம்எட் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான இணையதளத்தில் விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது
எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கை
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-27 கல்வியாண்டிற்கான அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் (M.Ed.) மாணாக்கர் சேர்க்கைகான இணையதள விண்ணப்பப் பதிவு 11.08.2026 முதல் 20.08.2026 வரை நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எம்.எட். பாடப்பிரிவுகள் கொண்டுள்ள 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 300 இடங்கள் உள்ளன. இவ்விடங்களுக்கு 2026-27ஆம் கல்வியாண்டில் மாணாக்கர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் 11.08.2026 அன்று முதல் இணையவழியில் தொடங்கும்.
விண்ணப்பிப்பது எப்படி.?
மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ளலாம். மேற்படி இணையதள முகவரியில் 20.08.2026 வரை பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. பின்னர். இதற்கான தரவரிசைப் பட்டியல் 25.08.2026 அன்று வெளியிடப்படும். மாணாக்கர் சேர்க்கை 27.08.2026 முதல் 31.08.2026 வரை நடைபெறும். மேலும், முதலாம் ஆண்டு வகுப்புகள் 01.09.2026 அன்று முதல் துவங்கும் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















