Bipasha Basu Pregnant: ‘பொம்பள புள்ளதான் வேணும்’ .. 43 வயதில் கர்ப்பம்.. சச்சின் பட நடிகையின் பளிச் பேட்டி!
தனக்கு பெண் குழந்தையே பிறக்க வேண்டும் என விரும்புவதாக நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்
தனக்கு பெண் குழந்தையே பிறக்க வேண்டும் என விரும்புவதாக நடிகை பிபாஷா பாசு தெரிவித்துள்ளார்
இது குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு பேசிய நடிகை பிபாஷா பாசு, “ நானும் கரணும் பெண் குழந்தையையே விரும்புகிறோம். ஆரம்பத்தில் இருந்தே இந்த விஷயத்தில் நாங்கள் மிகவும் உறுதியாக இருந்தோம். இது ஏன் ( கர்ப்பம் தரித்தது) இவ்வளவு தாமதமானது அல்லது ஏன் நேரம் எடுத்தது என்பது பற்றி எனக்கு எந்த சிந்தனையும் இல்லை. என்னைப் பொறுத்தவரை இதுவே சரியான நேரம். நாங்கள் எங்கள் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். எங்களின் இருவரின் வெளிப்பாடும் அதுவாகவே இருக்கிறது.
View this post on Instagram
குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டதில் இருந்தே எங்களுக்கு பெண் குழந்தை வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஒரு குழந்தை ஒரு அழகான பரிசு என்பதை நான் அறிவேன். எங்கள் எண்ணம் எந்த பாலினத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. அதுதான் இருப்பதிலேயே பெரிய விஷயம். ஆனால் நாங்கள் எங்கள் குழந்தையை ‘அவள்’ என்றே அழைக்க விரும்புகிறோம். அது எண்ணம் நிறைவேறும் என்று நாங்கள் நம்புகிறோம். அதை நாங்கள் குழந்தை பெற முடிவு செய்த காலத்தில் இருந்தே நம்பிக்கொண்டிருக்கிறோம்” என்று பேசியுள்ளார்.
முன்னதாக, பிரபல பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவும் நடிகர் கரண் சிங் குரோவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், நடிகை பிபாஷா பாசு கர்ப்பமாக உள்ளதாக கடந்த மார்ச் மாதமே தகவல் வெளியானது. ஆனால் அது குறித்து இருவரும் எதுவும் சொல்லவில்லை. இந்த நிலையில்தான் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் நடிகை பிபாசு பாசு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கர்ப்ப செய்தியை அறிவித்ததோடு, கணவருடன் எடுத்துக்கொண்ட போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.
View this post on Instagram
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்த பிபாஷா பாசு, “ புதிய நேரம், புதிய கட்டம், புதிய ஒளி எங்களுடைய வாழ்விற்கு தனித்துவமான ஷேடை கொடுத்திருக்கிறது. முன்பு இருந்ததை விட கொஞ்சம் முழுமையாக உணர்கிறோம். நாங்கள் இந்த வாழ்க்கையைத் தனித்தனியாகத் தொடங்கினோம். பின்னர் ஒருவரையொருவர் சந்தித்தோம். நாம் இருவர் மட்டுமே பகிர்ந்து கொண்ட அன்பு பார்ப்பதற்கே கொஞ்சம் அநியாயமாகத் தோன்றியது. இருவராக இருந்த நாம் மூவராகிவிடுவோம்.
எங்கள் அன்பால் வெளிப்படும் ஒரு படைப்பு, எங்கள் குழந்தை விரைவில் எங்களுடன் சேர்ந்து எங்கள் மகிழ்ச்சியை சேர்க்க இருக்கிறது. அனைவருக்கும் நன்றி, உங்கள் நிபந்தனையற்ற அன்பு, உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் நல்வாழ்த்துக்கள் எப்போதும் எங்களில் ஒரு பகுதியாக இருக்கும். எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கும், எங்களுடன் மற்றொரு அழகான வாழ்க்கையை வெளிப்படுத்தியதற்கும் நன்றி.எங்கள் குழந்தை துர்கா துர்கா” என்று பதிவிட்டு இருந்தார். நடிகை பிபாஷா பாசு விஜய் நடித்த ‘சச்சின்’ படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.