BiggBoss in OTT: ஓடிடியில் பிக்பாஸ்! களமிறங்கும் ஜூலி, வனிதா விஜயகுமார்! வெளியான தகவல்களால் குஷியில் BB ஃபேன்ஸ்!
இதுவரை உலகளவில் சின்னத்திரைகளைக் கலக்கிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இனி ஓடிடி தளத்தை அதிரவைக்கப் போகிறது.
இதுவரை உலகளவில் சின்னத்திரைகளைக் கலக்கிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இனி ஓடிடி தளத்தை அதிரவைக்கப் போகிறது.
அவ்வப்போது அரசல்புரசலாக ஓடிடியில் பிக்பாஸ் செய்தி பற்றியத் தகவல் பகிரப்பட்டு வந்த நிலையில், இப்போது அது உறுதியாகிவிட்டது.
ஒரு சில சின்னத்திரை நிகழ்ச்சிகள் உலகளவில் பிரபலமானவை. அப்படி நகர்ந்து நம்ம ஊருக்கு வந்தது தான் பிக்பாஸ். ஒரு வீட்டுக்குள்ள 100 நாள் இருக்கணுமாம். வீடு முழுக்க கேமராவாம் என்ற பல பல எதிர்பார்ப்பு பேச்சுகளுக்கு இடையே கமல்ஹாசன் குரலில் தொடங்கியது பிக்பாஸ். விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கும் தாறுமாறாக எகிறியது. முதல் சீசன் மீதான எதிர்பார்ப்பு அதனை பூர்த்தி செய்யவே செய்தது. ஜூலி, ஓவியா என பரபரப்பாகவே இருந்தது. ஆர்மிகளும், ஹேட்டர்களும் சோஷியல் மீடியாக்களில் சுற்றித் திரிந்தார்கள். முதல் சீசன் வெற்றி என்ற பெருமிதத்துடன் கணக்கை தொடங்கிய பிக்பாஸ் இன்று 5வது சீசனில் சென்றுகொண்டிருக்கிறது.
விஜய் டிவியில் இப்போது பிக்பாஸ் 5வது சீசனை எட்டியுள்ளது. முதல் சீசன் தொடங்கி இப்போது வரை கமல்ஹாசனே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்குக் கோவிட் பாதித்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஜனவரி 2வது வாரத்துடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து ஓடிடி தளத்தில் 12 முதல் 13 போட்டியாளர்கள் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி நடக்கவுள்ளதாகவும் இதையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
வருகிறார்கள் வனிதா, ஜூலி:
பிக்பாஸ் முதல் சீசனில் அப்ளாஸை அள்ளியவர் ஜூலி. சின்னத்திரையில் 100 நாட்கள் என்றால் ஓடிடியில் 70 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஜூலி, வனிதா விஜயகுமார், அனிதா சம்பத் ஆகியோர் பங்கேற்பது உறுதியாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த சீரிஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக உள்ளது.
தற்போதைய சீசன் 5 நிகழ்ச்சி ஜனவரி 2 வாரத்தில் முடிவடைகிறது. இதனையடுத்து ஜனவரி 23 ஆம் தேதியன்று ஓடிடியில் பிக்பாஸ் தொடங்கும் எனத் தெரிகிறது.
ஏற்கனவே பிக்பாஸ் தெலுங்கு தொகுப்பாளரான நாகர்ஜுனா கிராண்ட் பைனலுக்கு பிறகு பிக்பாஸ் தெலுங்கு ஓ.டி.டி.யை தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்தார். தெலுங்கில் பிப்ரவரி மாதமும், தமிழில் ஜனவரி 23 ம் தேதி முதல் துவங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வயிற்றுவலி ஜூலி , பிக்பாஸ் புகழுக்குப் பின்னர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளில் கலக்கிய வனிதா, அழுமூஞ்சி எனப் பெயரெடுத்த அனிதா ஆகியோர் ஓடிடியில் என்ன ஆட்டம் ஆடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.