Madan Gowri : மதன்கௌரியை ஒருமையில் திட்டிய நடிகை காஜல்...! ஏன் தெரியுமா..?
இந்தியாவிற்கு பலமான எதிர்க்கட்சித் தலைவர் தேவை என்ற மதன்கௌரியை நடிகை காஜல் பசுபதி ஒருமையில் விமர்சித்துள்ளார்.
யூ டியூப் மூலம் மிகவும் பிரபலமானவர் மதன்கௌரி. பல சுவாரஸ்யமான தகவல்களை மக்களிடம் பகிர்ந்துகொண்டு வருகிறார். இதனால், இவரது யூ டியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். சமீபகாலமாக மதன்கௌரி சுவாரஸ்யமான நிகழ்வுகள் மட்டுமின்றி நாட்டு நடப்புகள், உலக நிலவரங்கள் குறித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்தியாவின் அரசியல் சூழல், விலைவாசி ஏற்றம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மதன்கௌரி தனது யூ டியூப் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் மதன்கௌரி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இந்தியாவிற்கு ஒரு பலமான எதிர்க்கட்சித் தலைவர் தேவைப்படுகிறது என்று பதிவிட்டிருந்தார். அவரது கருத்திற்கு கலவையான கருத்துக்கள் கிடைத்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான நடிகை காஜல் “நீ மூடு” என்று ஒருமையில் அவதூறாக மதன்கௌரிக்கு பதிலளித்திருந்தார். அவரது கருத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகை காஜல் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். அந்த படத்தில் செவிலியராக நடித்திருந்தார்.
பின்னர், டிஷ்யூம் என்ற படத்தில் நடிகை சந்தியாவின் தோழியாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்புகுதிரை மற்றும் கலகலப்பு 2 ஆகிய படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.
காஜல் சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இயங்கி வருபவர். சமூக பிரச்சினைகள் குறித்து மிகவும் தைரியமாக பதிவிட்டு வருகிறார். பா.ஜ.க.வினரை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சூழலில் இந்தியாவிற்கு பலமான எதிர்க்கட்சித் தலைவர் தேவை என்ற மதன்கௌரியின் கருத்தை காஜல் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தற்போது மத்தியில் பலமான எதிர்க்கட்சியாக இல்லை என்பதையே மதன்கௌரி தனது கருத்து மூலம் குறிப்பிட்டுள்ளார் என்றும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்