Bigg Boss 5 Tamil: மருத்துவ முத்தமா? ஆறுதல் முத்தமா? பாவனிக்கு அள்ளிக்கொடுத்த அமீர்.! பிக்பாஸ் ட்ரெண்டிங்!!
பிக்பாஸ் சீசன் நேற்றைய எபிசோடில் பாவனிக்கு அமீர் முத்தம் கொடுத்த நிகழ்வு தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
Bigg Boss 5 Tamil: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரு சிலருக்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து இணையதளத்தில் ட்ரெண்ட் செய்து வருவர்.
முதல் சீசனில் ஓவியாவில் ஆரம்பித்த அந்த ஆர்மி, கவினிடம் ஒரு கலக்கு கலக்கி, தற்போது பவானி வரை நீண்டு வருகிறது. எப்போது பிரபலமான முகங்களுடன் களைகட்டும் பிக்பாஸ் வீடு இந்த சீசனில் பெரிதாக பிரபலம் இல்லாதவர்களைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் சுவாரசியத்திற்கு குறையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது நிகழ்ச்சி. இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக நடன இயக்குநர் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்.
இவர் இந்த சீசனில் களமிறங்கியது முதலே, அடுத்தடுத்து பரபரப்பான சூழல் பறந்து வருகிறது. முதலில் பவானி பின்னால் ஆர்மியை வளர்த்த ரசிகர் கூட்டம், தற்போது ஆவென்று வாய் பிளக்கும் அளவிற்கு நேற்று ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதில், நேற்று பாவனிக்கு ஆறுதல் தெரிவிப்பதாக தெரிவித்து, பாவனி கன்னத்தில் அமீர் முத்தமிட்டார்
#Amir started playing his game 😜😜 to make use of his opportunity in Bigg Boss Tamil Season 5 !#BiggBossTamil5 #biggbosstamilseason5 #BB5voting#biggbosstamil5voting #Biggboss5tamilVoting pic.twitter.com/DjfUSxJQCd
— bigbossfan2021 (@bigbossfan20211) December 18, 2021
இதைப்பார்த்து பதறிப்போன பவானி படை ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமா தமிழ்நாடு அளவில் #biggboss5 மற்றும் #amir என்ற ஹேஸ்டேக்கும் முதல், இரண்டாம் இடத்தில் உள்ளது. அடப்பாவி அமீரூ காதலிக்குறேனு அபிநய் ஜீவன் சுத்துனாங்க. நல்லா போன காதலுக்குள்ள கால விட்டு கவுத்திப்புட்டு. இப்ப நீ உள்ள புகுந்து கோல் அடிக்குறியா என்று ரசிகர்கள் கமெண்டில் கலாய்த்து வருகின்றனர்.
#BiggBossTamil #BiggBossTamil5 #Amir and #Pavni in Bigg boss house 👇🏼#Amir : Bhavani ..... pic.twitter.com/Fzi7eP5TPp
— BB Fans Assemble (@BBFansAssemble) November 30, 2021
என்னதான் நாட்டாமை கமல், பாவனி காதல் தனிப்பட்ட விஷயம். அது அவங்க விருப்பம் இல்லாம பேசக்கூடாதுன்னு பேசுல பெர்மிஷன் கேட்குற அந்த நல்ல மனுஷன் முன்னாடி, விருப்பமே இல்லாம கிஷ் அடித்து பாவனி படையின் பிஞ்சு நெஞ்சங்களின் மனச பீசு புடுங்கீட்டியே என்று கதறுகின்றனர்.
என்னவோ! பிக்பாஸ் இப்பதான் சூப்பரா போகுது... இன்னும் கொஞ்சம் சூடு ஏத்துங்கன்னு ஒரு கோஷ்டி சொல்ல, என்னடா இது போட்டிக்குள்ள வந்து போட்டியே விளையாடம்ம போட்டி போட்டு லவ் பண்ணிட்டு இருக்காங்கன்னு உன்னொரு கோஷ்டி கவலையில் இருக்காங்க. இந்த நிலையில் இன்று இரவு இது குறித்து கமல் ஏதும் பேசுவாரா என பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்