Vanitha Vijayakumar : ''நானும் பாதிக்கப்பட்டேன்.. எதிரிக்கும் இந்த நிலைமை வேண்டாம்'' - வனிதா பகிர்ந்த நச் கருத்து
வில் ஸ்மித் விவகாரம் தொடர்பாக வனிதா இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடந்தது.ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக நடிகர் வில் ஸ்மித், சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கிறிஸ் ராக் நகைச்சுவையாக பேசி கொண்டிருந்தார். அப்போது அவர் நடிகர் ஸ்மித்தின் மனைவி நடிகை ஜடா பிங்கெட் ஸ்மித் பற்றி நகைச்சுவையாக பேசினார்.
இதனால் வருதமடைந்த வில் ஸ்மித், மேடையை நெருங்கி தொகுப்பாளர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்தார். பின்னர், நிகழ்ச்சியின் போதே அவர் தனது செயலுக்கு ஆஸ்கர் விழா குழுவினரிடம் மன்னிப்பு கேட்டார். இந்த சம்பவம் தொடர்பாக உலகமே பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறது. ஒருவரை உடல் ரீதியாக கிண்டல் செய்வதற்கு வில் ஸ்மித்தின் அறை மிகப்பெரிய பாடமென்றும், என்னதான் தவறென்றாலும் வில் ஸ்மித் அப்படியொரு வன்முறையை கையில் எடுத்திருக்கக் கூடாது எனவும் பலவேறு தாப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் இது குறித்து பிக்பாஸ் வனிதா இன்ஸ்டாவில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,
View this post on Instagram
"வன்முறையை மக்கள் சின்ன விஷயமாக நினைக்கிறார்கள். எந்த விதத்திலும் வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாது. இதில் நானும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். யாரையும் உடல் ரீதியாக வன்முறை செய்யாதீர்கள்.. மோசமான எதிரியை கூட.. " என பதிவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் இரண்டு வன்முறைகளையும் எதிர்த்து வனிதா பதிவிட்டுள்ளதாக பலரும் பதிவிட்டுள்ளனர்.
முன்னதாக இது குறித்து மன்னிப்புக் கோரிய வில் ஸ்மித், '' இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “ஒரு விழா மேடையில் நகைச்சுவை என்பது இயல்பானது தான் என்றாலும், என்னுடைய மனைவியின் உடல்நல பாதிப்பு குறித்து தொகுப்பாளர் கிறிஸ் ராக் கேலி செய்தது என்னை உணர்ச்சிவசப்பட வைத்துவிட்டது. காதல் உங்களை பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்ய வைக்கும்.
அன்பு நிறைந்த இந்த பூமியில் வன்முறைக்கு இடமில்லை. இந்த செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். எனக் குறிப்பிட்டார்.
View this post on Instagram