மேலும் அறிய

Bigg Boss Seanson 10: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிக்கிய புலி நகம்.. முக்கிய பிரபலத்தை கைது செய்த வனத்துறை..!

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வர்தூர் சந்தோஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவரான வர்தூர் சந்தோஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொலைக்காட்சித் தொடர்களுக்கு  நிகராக வயது வித்தியாசமில்லாமல்  அனைத்து தரப்பு மக்களையும் ரியாலிட்டி ஷோக்கள் ஈர்த்து வருகின்றன. தினந்தோறுமோ அல்லது வாரம் ஒருமுறையோ அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானால் தவறாமல் நம்மில் பலரும் டிவி முன்னால் ஆஜராகி விடுவோம். அப்படியே நிகழ்ச்சியை தவற விட்டு விட்டால் தற்போது ஓடிடி தளங்களில் எப்போது வேண்டுமானால் பார்த்துக் கொள்ளும் வசதியும் வந்துவிட்டது. அப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். 

இந்நிகழ்ச்சியை தமிழில் 7வது சீசனாக தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதனை தமிழில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல் இந்தி. மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கன்னடத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 10 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.பிரபல கன்னட நடிகர் மற்றும் இயக்குநர் கிச்சா சுதீப் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி முதல் கலர்ஸ் சேனலில் ஒளிபரப்பாகி வருகிறது. 

பாக்யஸ்ரீ, எஷானி, கார்த்திக், மைக்கேல், நம்ரதா, நீது, பிரதாப், ரக்‌ஷக், சங்கீதா, சந்தோஷ் குமார், வர்தூர் சந்தோஷ், சரி, சினேஹித், தனிஷா,வினய், கௌரிஷ், ஷ்யாம், சித்ரால், அவினாஷ் ஆகிய 19 பேர் பங்கேற்றனர். இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான வர்தூர் சந்தோஷ் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் புலி நகம் கொண்ட செயின் ஒன்றை அணிந்திருந்தார். இது நிகழ்ச்சி வழியாக வெளியுலகுக்கு தெரிய வந்தது. 

வனத்துறை சட்டப்படி புலி நகங்களை வைத்திருப்பது குற்றமாகும். இதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த வனத்துறையினர் நேற்று மாலை பிக்பாஸ் செட் போடப்பட்ட இடத்திற்கு வந்தனர். அங்கு வர்தூர் சந்தோஷின் செயினில் இருந்த நகங்கள் சோதனை செய்யப்பட்டது. அது ஒரிஜினல் தான் என தெரிய வந்ததை தொடர்ந்து செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வர்தூர் சந்தோஷ், வனத்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த வனத்துறை துணைப் பாதுகாவலர் ரவீந்திர குமார், "அவர் புலி நகங்கள் அணிந்திருப்பது தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து புகார்வந்தது. இதன் பிறகு, நாங்கள் கோமகட்டா அருகே உள்ள பிக் பாஸ் ஸ்டுடியோவுக்குச் சென்று ஆய்வு செய்தோம். பின்னர் வர்தூர் சந்தோஷிடம் விசாரணை நடத்தினோம். அழிந்து வரும் உயிரினம் பட்டியலில் புலிகள் இருக்கும் நிலையில் இதற்கு மூன்று முதல் ஏழு ஆண்டுகள் வரை அதிகப்பட்ச தண்டனை கிடைக்கும் என கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட வர்தூர் சந்தோஷ் கக்கலிப்புரா வனச்சரக அலுவலகத்தில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
Bigg Boss Commonman: சாமானியன் என்றால் கேவலமா? பிக்பாசை கிழித்து தொங்கவிடும் நெட்டிசன்கள்!
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
புடிச்சு உள்ள போடுங்க சார்..வாட்டர்மெலன் ஸ்டார் கைது..என்ன சேட்ட பண்ணார் தெரியுமா?
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
உளவாளி வைத்து என்னை கண்காணிக்கிறார்கள்...கெனிஷா பிரான்சிஸ் அதிர்ச்சி வீடியோ
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?
Bigg Boss Tamil 9: அப்படிப்போடு.. பிக்பாஸ் 9 தமிழ் டைட்டில் வின்னர் யார் தெரியுமா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget