மேலும் அறிய

Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ

CMCHIS Health Insurance: : மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டால் பல லட்சங்கள் தேவை என்ற நிலையில், ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஒரு ரூபாய் செலவு இல்லாமல் ரூ.5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற காப்பீட்டு திட்டத்தை பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம்.

ஒரு ரூபாய் செலவு இல்லாமல் மருத்துவ சிகிச்சை

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்தில் நோய்களும் அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மருத்துவமனையில் அதிகரித்து வருகிறது. இது ஒரு பக்கம் என்றால் திடீரென ஏற்படும் விபத்து போன்றவைகளாலும் மக்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் பணம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதுவே ஏழை எளிய மற்றும் நடுத்தர வர்க்க மக்களால் லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை எடுப்பது என்பது முடியாத காரியம். எனவே அரசின் சார்பில் தனியார் மருத்துவமனையில் இலவச சிகிச்சை எடுத்துக்கொள்ளும் வகையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக 1 லட்சம் ரூபாய்க்கு இலவச மருத்து சிகிச்சைக்கான காப்பீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் தகுதியான குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 இலட்சம் வரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக உயர் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் கீழ்  தகுதியுள்ள குடும்பங்களுக்கு அரசு செலவில், பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சிகிச்சைகளை பணமில்லா முறையில் பெற உதவும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்ட பயன்கள்

அறுவை சிகிச்சைகள், மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகள் ஆகியவற்றுக்கு காப்பீட்டு வசதி உள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?

  • பொதுப் பிரிவில் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.1,20,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.
  • தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • குடும்பத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் இருந்தால், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தகவல்படி வருமான உச்சவரம்பு இல்லாமல் சிறப்பு தகுதி வழியாக சேர்க்கும் ஏற்பாடும் உள்ளது.

தேவையான ஆவணங்கள்

  • குடும்ப அட்டை
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டைகள்
  • வருமானச் சான்றிதழ்
  • தேவையான பிற அடையாள அல்லது முகவரி ஆவணங்கள்

காப்பீட்டை பெற எங்கே விண்ணப்பிக்க வேண்டும்?

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அட்டையைப் பெற, உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள CMCHIS அட்டை வழங்கும் அல்லது சேர்க்கை மையத்தை அணுகலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதி உறுதி செய்யப்பட்டு அட்டை வழங்கப்படும்.

எங்கெல்லாம் சிகிச்சை பெறலாம்.?

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்ற பிறகு, CMCHIS திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். இணைக்கப்பட்ட மருத்துவமனைகளின் பட்டியலை அதிகாரப்பூர்வ தளத்தில் பார்க்கலாம்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
CM Vijays: முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
முதலமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகள் - டாப்பில் ரேவந்த், சுவேந்து - CM விஜய்க்கு எந்த இடம்?
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
CM விஜய்க்கு புதிய அறை.! டெண்டர் அறிவிக்கும் முன்பாக பணிகள் தொடங்கியது எப்படி? லிஸ்ட் போட்டு டிடிவி கேள்வி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
டாடா கர்வ், மஹிந்திரா BE 6e, க்ரெட்டா EV: டாப் எலெக்ட்ரிக் எஸ்யுவி எது? முழு ஒப்பீடு!
Embed widget