மேலும் அறிய

New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!

New Audi Q3 India Launch: தற்போதைய மாடலை விட புதிய Q3 கார் மிகவும் நவீனமாகவும், ஸ்போர்ட்டியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள புதிய ஆடி Q3 (Audi Q3) எஸ்யுவி காரின் முதல் டீசரை ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்தியாவில் முழுமையாக அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய தலைமுறை கார் குறித்து கீழே விரிவாக அறியலாம்.

வடிவமைப்பு

தற்போதைய மாடலை விட புதிய Q3 கார் மிகவும் நவீனமாகவும், ஸ்போர்ட்டியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன்புறத்தில் புதிய ஸ்பிளிட் ஹெட்லேம்ப் டிசைன், முந்தையதை விட மிகவும் பெரிய கிரில் மற்றும் புதிய 2D ஆடி லோகோ ஆகியவை இடம்பெற்றுள்ளன.

காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறம் அதிக வளைவுகளுடன் செதுக்கப்பட்டதை போன்ற நவீன தோற்றத்தைக் கொண்டுள்ளது. மேலும், இதில் 18-இன்ச் சக்கரங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!

உட்புறம் மற்றும் சிறப்பம்சங்கள்

உட்புறத்தில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 11.9 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் 12.8 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. புதிய தோற்றத்திலான ஸ்டீயரிங் வீல், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே, வென்டிலேட்டட் மற்றும் பவர் சீட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், லெவல் 2 ADAS போன்ற பல அதிநவீன வசதிகள் இதில் இடம்பெற உள்ளன.

பெட்ரோல் ஆப்ஷன் மட்டுமே

இந்த புதிய Q3 கார் பெட்ரோல் ஆப்ஷனில் மட்டுமே வெளிவரும். இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 7-ஸ்பீடு DSG ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட உள்ளது.

மற்ற கார்களை விட இதன் முக்கிய சிறப்பம்சமாக ஆடியின் புகழ்பெற்ற குவாட்ரோ சிஸ்டம் இதில் இடம்பெற்றுள்ளது. காரின் மைலேஜ் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!

விலை எப்படி?

இந்தியாவில் ஆடியின் விற்பனையை அதிகரிப்பதில் இந்த மாடல் மிக முக்கிய பங்கு வகிக்கும். ஏனெனில் இதன் தற்போதைய மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். இதன் விலை விவரங்கள் இன்னும் சில நாட்களில் நடைபெறும் அறிமுக விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய Q3 காரைத் தொடர்ந்து, ஆடியின் ஃபிளாக் ஷிப் மாடலான Q9 உள்ளிட்ட பல புதிய கார்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அறிமுகமாக உள்ளன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahindra XUV 3XO: 24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
24KM மைலேஜ்..! முதல் CNG காரின் விலையை அறிவித்த மஹிந்த்ரா - டர்போ இன்ஜினில் மிரட்டல் ஸ்பீட்
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
BS-VII வரப்போகுது! பழைய கார், பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
மஹிந்திராவின் முதல் CNG கார்... இந்திய சந்தையில் நாளை அறிமுகமாகிறது Mahindra XUV 3XO!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
CM Vijay: இன்று கோவை செல்லும் முதலமைச்சர் விஜய்.. ஏர்போர்ட் டூ காந்திபுரம் ரோடு ஷோ! மாணவர்களைச் சந்திக்கிறாரா?
TN Weather News: 34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
34 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் மிக கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Jailer 2 Collection: அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
அடேங்கப்பா..! ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் எத்தனை கோடிகள் தெரியுமா? எகிறி அடித்த ரஜினிகாந்த்
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
Rice: ரூ.30-க்கு அரிசி.. ரூ.130-க்கு துவரம்பருப்பு.. எங்கு கிடைக்கும்? தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு!
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
விஜய்யின் ரகசிய ஆந்திரப் பயணம்? துரைமுருகன் கேட்ட நறுக் கேள்வி... அலறும் தவெக!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
TASMAC: ரீல்ஸ் ஆட்சி நடத்தும் மிஸ்டர் விஜய்.. இதுதான் டாஸ்மாக் குறைக்கும் லட்சணமா? கீதா ஜீவன் கொந்தளிப்பு!
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! லிஸ்ட் இதோ
Embed widget