மேலும் அறிய

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்

கோ-ஆப்டெக்ஸ் மூடல்: வாக்களித்த நெசவாளர்களுக்கு துரோகம் தவெக அரசு துரோகம் செய்வதா?- அன்புமணி கண்டனம்

10 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களை மூடும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றும் நெசவாளர்களுக்கு
வாக்குறுதி அளித்து விட்டு ஏமாற்றக்கூடாது எனவும் பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தமிழ்நாட்டில் கடலூர், சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட நகரங்களிலும், ஆந்திரம், மராட்டியம் உள்ளிட்ட நகரங்களிலும் செயல்பட்டு வரும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 10 விற்பனையகங்களை மூட அரசு ஆணையிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கைத்தறி நெசவாளர்களின்  வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும்,  கைத்தறி துணிகளை விற்பனை செய்வதற்காகவும்  உருவாக்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவது கவலையளிக்கிறது.

என்ன காரணம்?

விற்பனையிலும், வருவாயிலும் ஏற்பட்ட வீழ்ச்சி, ஆள்குறைப்பு நடவடிக்கைகள் ஆகியவைதான் இந்த முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த முடிவின்படி சில விற்பனையகங்கள் மூடப்பட்டு விட்டன. மேலும் சில விற்பனையகங்களில்  விற்பனையும்,  மீதமுள்ளவற்றில் கொள்முதலும் நிறுத்தப்பட்டு விட்டன. அடுத்த சில வாரங்களில் 10 விற்பனையகங்களும் மூடப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது.

கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள் நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் பின்னிப் பிணைந்தவை ஆகும். கோ-ஆப்டெக்ஸ் என்பதே தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் என்பதன் வணிகப் பெயர்தான் . 1935ஆம் ஆண்டில்  தொடங்கப்பட்ட கோ ஆப்டெக்ஸ்  விற்பனையகங்கள்  ஒரு காலத்தில் அரசு ஊழியர்கள், நெசவாளர்கள், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களின் விருப்பத்திற்குரிய ஆடையகமாக இருந்தது. ஆனால், தனியார் நிறுவனங்களின் நலனுக்காக கோ ஆப்டெக்ஸ் திட்டமிட்டு சீரழிக்கப்பட்டதன் விளைவுதான் இன்றைய அவலம் ஆகும்.

உடனடி நடவடிக்கை தேவை


2025-16ஆம் ஆண்டில்  தமிழ்நாட்டில் 133, வெளிமாநிலங்கள், வளைகுடா நாடுகள், ஐரோப்பா ஆகியவற்றில் 67  என மொத்தம் 200 விற்பனையகங்களுடன்  கோ-ஆப்டெக்ஸ்  செயல்பட்டு வந்தது. அதன்பின் கடந்த 2025-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 150 ஆக குறைந்து விட்டது. நடப்பாண்டில் மேலும் 10 விற்பனையகங்கள் மூடப்படுகின்றன. இதே நிலை நீடித்தால் 2035-ஆம் ஆண்டில் நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டிய  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூடுவிழா நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அதனால் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தைக் காக்க உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை

2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக அரசு வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ’’தமிழ்நாட்டின் ஒவ்வொரு முக்கிய நகரத்திலும் வெற்றித் தறி ஷோரூம்கள் அமைக்கப்படும். தமிழக நெசவாளர்களின் தயாரிப்புகளை சர்வதேச அளவில் விற்பனை செய்வதற்கு பிரத்தியேகமான இ-காமர்ஸ் பிராண்ட் உருவாக்கப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. வெற்றித் தறி ஷோரூம்கள் என்ற பெயரில் புதிய விற்பனையகங்களை திறக்கப் போவதாகக் கூறி விட்டு, இருக்கும் விற்பனையகங்களையும் மூடுவது சரியல்ல. தவெகவின் சொல்லுக்கும், செயலுக்கும் தொடர்பு இல்லை என்பதையே இது காட்டுகிறது.

தவெக  ஆட்சிக்கு வந்தால் நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று நெசவாளர்கள் நம்பினார்கள்.  அதனால்தான் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதற்கு காரணமாக நெசவாளர்களை ஏமாற்றக் கூடாது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் 10 விற்பனையகங்களை  மூடும் முடிவை கைவிட வேண்டும். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் புதிய கோ-ஆப்டெக்ஸ்  விற்பனையகங்களைத் திறந்து நவீன சந்தை மற்றும் விற்பனை உத்திகளுடன்  கோ-ஆப்டெக்ஸ்  நிறுவனத்திற்கு புத்துயிரூட்ட வேண்டும்’’ என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
சிந்தாமணி ஸ்டேஷனில் லாக்கப் மரணம்? “தவெக ஆட்சியில் தொடரும் கொடூரம்” - டிடிவி தினகரன் கொந்தளிப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
ஆகாஷை நினைச்சா கவலையாக இருக்கு.. காவல் நிலையத்தில் என்ன நடக்கப்போகுதோ.? நயினார் பகீர்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
Embed widget