எனக்கு காபி இல்லையா! யாருக்கும் டீ கிடையாது! - அல்டிமேட்களை அலறவிடும் வனிதா விஜயகுமார்!
வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியானது அண்மையில் நடந்து முடிந்தது. டைட்டில் வின்னராக, ராஜூ அறிவிக்கப்பட்ட நிலையில், ரன்னராக ப்ரியங்கா அறிவிக்கப்பட்டார். எல்லா சீசன்களை போலவும் இந்த சீசனுக்கும் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், விஜய்டிவி பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான அறிவிப்பை வெளியிட்டது.
அதன்படி இந்த நிகழ்ச்சியின் டேக் லைனான “ தொலைச்ச இடத்துலதான் தேட முடியும், தோத்த இடத்துலதான் ஜெயிக்க முடியும்” என்பதற்கேற்ப, கடந்த சீசன்களில் பல்வேறு காரணங்களால் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். அதன் படி வனிதா, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி, அனிதா சம்பத், சுஜா வருணி, தாமரை செல்வி, ஷாரிக் ஹசன், சினேகன், சுருதி, அபினய், அபிராமி, நிரூப் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
View this post on Instagram
இவர்களில் பெரும்பாலானவர்கள் பிக்பாஸ் வீட்டில் முன்னர் இருந்தபோது பல்வேறு பிரச்னைகளில் சிக்கியவர்கள். முக்கியமான பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்ற வனிதா விஜயகுமார் பிக்பாஸ் வீட்டுக்குள் போலீஸ் தேடி வரும் அளவுக்கான சர்ச்சையில் சிக்கியவர். தற்போது அல்டிமேட் பிக்பாஸில் இவரும் ஒரு போட்டியாளர். ஆனால் அவரது நடவடிக்கைகள் அவரது ரசிகர்கள் உட்பட அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
இதனை முழுவதுமாகவே காட்சிபடுத்தியுள்ளனர் பிக்பாஸ் குழுவினர். இந்த வாரம் நிகழ்ச்சியில் கேப்டனாக உள்ள ஷாரிக் ஹசனே பொறுமை இழக்கும் அளவுக்கு சில செயல்களைச் செய்து வருகிறார் வனிதா. வீட்டில் உள்ளவர்களிடம் தனக்குக் குடிக்க காபி வேண்டும் என அடம் பிடிப்பது, இதோடு மட்டுமில்லாமல் பிக்பாஸிடமே தனக்கு இது வேண்டும் அது வேண்டும் என கோரிக்கை வைப்பது போன்ற கெடுபிடிகளைச் செய்துவருகிறார். வீட்டில் காபி இல்லை என்றதும் தனக்கு காபி இல்லை என்றால் வீட்டில் யாருக்குமே டீ இருக்கக் கூடாது என டீத் தூளை ஒளித்து வைப்பது போன்ற சிறுபிள்ளைத் தனமானசெயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். இது அனைவரையுமே முகம் சுளிக்க வைத்துள்ளது.