மேலும் அறிய

`8 மணிக்கு ஆட்டம் போட்டுட்டு.. ஏசி ரூம்ல gossip பேசிட்டு..’ - `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விமர்சித்த `சர்வைவர்’ போட்டியாளர்!

தமிழில் பல பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக `சர்வைவர்’ கருதப்பட்டு வரும் சூழலில், போட்டியாளர் ஒருவர் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

`சர்வைவர்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழில் பல பார்வையாளர்களைக் கொண்டிருக்கும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்குப் போட்டியாக இந்த நிகழ்ச்சி கருதப்பட்டு வரும் சூழலில், `சர்வைவர்’ போட்டியாளர் ஒருவர் நேற்றைய நிகழ்ச்சியில் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பார்வையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜீ தொலைக்காட்சியின் `சர்வைவர்’ நிகழ்ச்சி கடந்த 12 நாள்களாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆப்பிரிக்காவின் தன்சானியா நாட்டில் ஜான்ஸிபார் தீவுகளில் போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டு, இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். `காடர்கள்’, `வேடர்கள்’ எனப் பிரிக்கப்பட்டிருக்கும் இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளையும், அணிகளுக்குள் நிகழும் சிக்கல்களையும் தீர்த்து வைக்கவும், நிகழ்ச்சியைத் தொகுக்கவும் நடிகர் அர்ஜுன் சின்னத்திரையில் இந்த நிகழ்ச்சி மூலம் களமிறங்கி உள்ளார். 

`காடர்கள்’ அணியின் தலைவராகத் தற்போது விஜயலக்‌ஷ்மி இருக்கிறார். அவரது அணியில் விக்ராந்த், லேடி கேஷ், உமாபதி ராமையா, ராம்.சி, சரண் ஆகியோர் உள்ளனர். அம்ஜத் கான் தலைவராக இருக்கும் `வேடர்கள்’ அணியில் நந்தா, லட்சுமி பிரியா, ஐஷ்வர்யா, பெசண்ட் ரவி, லக்கி நாராயணன், விஜே பார்வதி ஆகியோர் பங்கேற்று வருகின்றனர். தொடக்கம் முதலே, `வேடர்கள்’ அணியில் பார்வதிக்கும் பிற போட்டியாளர்களுக்கும் தொடர்ந்து முரண்பாடுகள் நிலவி வந்தன. 

`8 மணிக்கு ஆட்டம் போட்டுட்டு.. ஏசி ரூம்ல gossip பேசிட்டு..’ - `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விமர்சித்த `சர்வைவர்’ போட்டியாளர்!

12வது நாள் ஒளிபரப்பப்பட்ட `சர்வைவர்’ நிகழ்ச்சியில், நள்ளிரவில் பார்வதியும், ஐஷ்வர்யாவும் நிகழ்ச்சியில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற தொடங்கிய உரையாடலைச் சண்டையில் முடித்ததாகவும், சுமார் ஒன்றரை மணி நேரம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் பார்வையாளர்களுக்குச் சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பார்வதி - ஐஷ்வர்யா சண்டை குறித்து போட்டியாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அப்போது `வேடர்கள்’ அணியின் தலைவர் அம்ஜத் கான், பார்வதியின் நடவடிக்கைகளைக் குறித்துப் பேசிய போது, `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். 

சக போட்டியாளர்கள் பெசண்ட் ரவி, நந்தா, லக்கி நாராயணன் ஆகியோருடன் இரவு நடந்த சண்டை குறித்துப் பேசிய அம்ஜத் கான், `அவங்க என்ன நினைச்சிருக்காங்கன்னா.. காலைல 8 மணிக்குப் பாட்டு போடுவாங்க; ஆடி முடிச்சிட்டு, பாத்திரம் கழுவிட்டு, சமைச்சிட்டு, பாத்ரூம் கழுவிட்டு, ஜாலியா ஏ.சி ரூம்ல உக்கார்ந்துட்டு gossip பண்ணலாம்னு நெனச்சிட்டு வந்திருக்காங்க.. இங்க வந்து பார்த்தா, சிஸ்டமே வேற மாதிரி இருக்கு..’ என்று மற்றொரு போட்டியாளரான பார்வதியை விமர்சிக்கும் போது, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார்.

`8 மணிக்கு ஆட்டம் போட்டுட்டு.. ஏசி ரூம்ல gossip பேசிட்டு..’ - `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை விமர்சித்த `சர்வைவர்’ போட்டியாளர்!

`சர்வைவர்’ நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவர், மற்றொரு பெரிய ரியாலிட்டி ஷோவான `பிக் பாஸ்’ நிகழ்ச்சியைப் போட்டியிலேயே விமர்சனம் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget