7-வது வாரத்தில் கிழிந்த முகத்திரை! சைலண்டா டஃப் கொடுக்கும் 4 போட்டியாளர்கள்; சூடு பிடித்த பிக் பாஸ்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த 6 வாரமாக சைலண்டாக விளையாடிய போட்டியாளர்கள் 4 பேரின் சுயரூபம் தற்போது வெளியே வந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது இப்போது தான் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இதுவரையில் அடக்கி வாசிச்ச போட்டியாளர்கள் இப்போது வேலைய காட்ட ஆரம்பிச்சிட்டாங்க. இவங்களா இப்படி விளையாடுறாங்க என்று ஆச்சரியப்படும் அளவிற்குற் போட்டியாளர்களின் பெர்பாமென்ஸ் இருக்கு.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8:
அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரையில் 8 வாரம் கடந்து 9ஆவது வாரத்தை எட்டியுள்ளது நிகழ்ச்சி. அதோடு பாய்ஸ் வெர்சஸ் கேர்ஸ்ல் எபிசோடு போராடித்துவிட்டதோடு, பெரிதாக ரசிகர்களிடம் வரவேற்பு பெறவில்லை. அதனால், 7ஆவது வாரத்தில் அதுக்கு முடிவுகட்டிய பிக்பாஸ் எல்லா போட்டியாளர்களையும் ஒரே அணியாக வச்சு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
இப்போது தான் வீட்டுக்குள்ள காதல் கதை ஒர்க் அவுட்டாக ஆரம்பிச்சிருக்கு. மேலும் ஏஞ்சல் வெர்சல் டெவில் டாஸ்க்கும் இப்போது தான் பரபரப்பாக நடந்து முடிஞ்சிருக்கு. இதில் சில சொதப்பலும் நடந்தது. பிக்பாஸ் தொடங்கியதிலிருந்து இவங்க எப்படி வீட்டுக்குள்ள தாக்குபிடிப்பாங்க என்று கணிக்கப்பட்ட போட்டியாளர்கள் தான் இத்தனை வாரத்துக்கு பிறகு அசத்தி இருக்கிறார்கள்.
சுயரூபத்தை காட்டும் 4 போட்டியாளர்கள்:
அதில் நடிகர் ரஞ்சித்தும் ஒருவர். சும்மா ஏன் வந்தோம், எதுக்கும் வந்தோம் என்று ஏனோ தானோ என்று விளையாடி வந்த ரஞ்சித் இப்போது எல்லோரும் பாராட்டும் வகையில் தன்னுடைய நாடகத்தை பிக்பாஸ் வீட்டுக்குள் காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆம் இப்போ நடந்து முடிந்த ஏஞ்சல் வெர்சஸ் டெவில் டாஸ்கில் சிறப்பாக விளையாடியிருக்கிறார். இவருக்கு பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள்.
அடுத்த வரிசையில் இருப்பது சத்யா தான். இவரெல்லாம் எதுக்கு வந்தார் என்று கேட்கும் அளவிற்கு பிக்பாஸ் வீட்டிற்குள் சைலண்டாகவே இருந்தார். ஆனால், அவர் இத்தனை நாட்கள் எப்படி தாக்குபிடித்தார் என்பது தான் ஆச்சரியம். இப்போது அதனை புரிந்து கொண்டு தன்னுடைய வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார். இந்த வார டாஸ்க்கில், ஏஞ்சலாக தன்னோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார்.
இவர்களது வரிசையில் அடுத்து இடம் பெற்றிருப்பது தீபக் தான். இதுவரையில் பிக்பாஸ் வீட்டில் அமைதியாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் சிறப்பாக விளையாடி வரும் போட்டியாளர்களின் பட்டியலில் இவருக்கும் தனி இடம் உண்டு. அதனால் தான் என்னவோ சின்னத்திரையில் இத்தனை ஆண்டு காலம் முத்திரை பதித்து வருகிறார். தன்னை ஒரு சிறந்த கேப்டனாகவும் பிக்பாஸ் வீட்டிற்குள் காட்டியுள்ளார். எல்லோரிடமும் பாராட்டும் பெற்றிருக்கிறார்.
கடைசியாக இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது பவித்ரா தான். இவரு கூட இப்படியெல்லாம் விளையாடுவாரா என்று ஆச்சரியப்படும் அளவிற்கு தன்னோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். கடந்த வாரம் நடந்த நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்கில் 6 போட்டியார்களை சைலண்டாக இருந்து கொண்டு வெளியில் அனுப்பிய பவித்ரா ஏஞ்சல் வெர்சல் டெவில் டாஸ்கில் ஏஞ்சலாக ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
பிக்பாஸ் இந்த வார எலிமினேஷன்:
ஹவுஸ் கேப்டனாக ஜெஃப்ரி இருக்கும் போது இந்த வாரம் அவர் எலிமினேட் ஆக வாய்ப்பில்லை. 9ஆவது வாரத்திற்கான நாமினேஷனில் ஆனந்தி, ஜாக்குலின், மஞ்சரி, முத்துக்குமரன், பவித்ரா, ராணவ், ரஞ்சித், ராயன், சாச்சனா, சத்யா, சவுந்தர்யா, தர்ஷிகா ஆகிய 12 போட்டியாளர்கள் எலிமினேஷனுக்கான நாமினேஷனில் இடம் பெற்றுள்ளனர். இதில், ராயன் அல்லது சாச்சனா எலிமினேட் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம். ஒருவேளை இந்த வாரம் பிக் பாஸ் டுவிஸ்ட் கொடுத்தாலும் கொடுக்கலாம்.