Losliya in bigboss : ஒரு தென்றல் புயலாகி வருதே..! மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அல்டிமேட்டாக வரும் லாஸ்லியா!
பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியா வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழையப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.
![Losliya in bigboss : ஒரு தென்றல் புயலாகி வருதே..! மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அல்டிமேட்டாக வரும் லாஸ்லியா! BIGGBOSS 3 FAME LOSLIYA IS GOING TO ENTER INTO BIGGBOSS HOUSE AS A WILDCARD CONTESTANT Losliya in bigboss : ஒரு தென்றல் புயலாகி வருதே..! மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அல்டிமேட்டாக வரும் லாஸ்லியா!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/06/3625b0d493f782186e3dcbe21326d3b8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக்பாஸ் தமிழ் 5 நிகழ்ச்சியை அடுத்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களையும், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இடையே, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தபோது மட்டும் ரம்யாகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார். இந்நிலையில், அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகினார். அவருக்கு பதில், நடிகர் சிம்பு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
தொகுப்பாளராக களமிறங்கிய சிம்பு:
14 போட்டியாளர்கள் பங்கேற்றிருக்கும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் 26 நாட்களே முடிந்துள்ள நிலையில், இனி நிகழ்ச்சியின் இறுதிவரை சிம்புவே தொகுத்து வழங்குவார் என தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே, சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக சிம்பு பங்கேற்றிருக்கிறார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, கடந்த வாரம் முதல் முறையாக சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார். சிம்பு தொகுத்து வழங்குவதற்கு முன்பாக நடிகை வனிதா உடல்நிலையை கருத்தில்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இதனால், அந்த வாரம் எலிமினேசன் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், இந்த வாரம் தாடி பாலாஜி எலிமினேசனாக அதிக வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தாடி பாலாஜி நிகழ்ச்சியில் பெரிதாக விருப்பம் காட்டாததால் இந்த வாரம் அவருக்கு குறைவாகவே ஓட்டு கிடைத்ததாகவும் தெரிகிறது.
View this post on Instagram
மீண்டும் களமிறங்கும் லாஸ்லியா :
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தற்போது பிக்பாஸ் சீசன் 3 புகழ் லாஸ்லியா வைல்ட்கார்ட் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டிற்குள் அதிகாரப்பூர்வமாக நுழையப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது. இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 3ம் இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)