Bigg Boss 7 Tamil: உடைந்து அழுத விஷ்ணு.. ஆறுதல் சொன்ன விசித்ரா.. பிக்பாஸில் இன்று!
Bigg Boss Tamil 7: எனக்கு எதிரா கேம் விளையாடறாங்க.. கேம தாண்டி பொய்யா விளையாடக்கூடாது. நான் போய் பேசினேன் அவங்ககிட்ட” என விஷ்ணு அழுதபடி கூறுகிறார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு தான் நாளை வெளியேறப் போவதாக விஷ்ணு கூறும் வகையில் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
லெஃப்ட் - ரைட் வாங்கிய கமல்
பிக்பாஸ் சீசன் 7 தற்போது 71ஆவது நாளை எட்டியுள்ளது. சென்ற வாரம் விஷ்ணு கேப்பிடன்ஸியில் பிக்பாஸ் வீட்டில் முரண்பாடுகளும் முட்டல் மோதல்களும் அதிகரித்த நிலையில், வார இறுதியில் அர்ச்சனா - நிக்சன் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்து ரசிகர்களுக்கு மன உளைச்சல் தரும் வகையில் அமைந்தது.
ரேஷன் பொருள்கள் கேப்டன் சரியாகக் கையாளவில்லை, எண்டர்டெய்ன்மெண்ட் இல்லை, பாரபட்சம் பார்க்கிறார், கேப்டனாக இருந்து கொண்டு கேங்க் சேர்ந்து விளையாடுகிறார் என விஷ்ணு மீது அடுக்கடுக்கான புகார்களை நேரிலும், கேமராவில் பதிவாகும்படியும் ஹவுஸ்மேட்ஸ்கள் தொடர்ந்து புகார்களை பதிவு செய்து வந்தனர். விஷ்ணுவின் முன்கோபம் அவர் கேப்டன் என்பதைத் தாண்டி சென்ற வாரமும் எட்டிப்பார்க்க, அதுவே அவருக்கு பின்னடைவைத் தந்தது.
உடைந்து அழுத விஷ்ணு
இந்நிலையில் நேற்றைய கமல்ஹாசன் எபிசோடில் விஷ்ணுவின் மீதான புகார்களை ஹவுஸ்மேட்ஸ்கள் மொத்தமாகக் கொட்ட விஷ்ணு மிகவும் பொறுப்பற்று பதில் தருவதாகக் கூறி கமல் கடுமையாகப் பேசினார். விஷ்ணுவும் தன் தரப்பு நியாயங்களை விடாமல் எடுத்துவைக்க, ஒருகட்டத்தில் “தலைமைக்கு இது அழகல்ல, நீங்கள் கேப்டன் பதவிக்கு உகந்தவர் அல்ல” என கமல் முற்றுப்புள்ளி வைத்தார். நேற்றைய எபிசோடில் விஷ்ணுவுக்கு அர்ச்சனாவைத் தாண்டி பலமான அர்ச்சனை விழ பயங்கர அப்செட்டில் ஆழ்ந்தார் விஷ்ணு.
இந்நிலையில் நேற்றைய எபிசோட் முடிந்து விஷ்ணு தேம்பி அழும் வீடியோ வெளியாகி பிக்பாஸ் ரசிகர்களை கவலை கொள்ள வைத்துள்ளது.
இந்த வீடியோவில் இரவு பெட்டில் உட்கார்ந்தபடி விஷ்ணு அழும் நிலையில் விசித்ரா அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்.“ இன்னைக்கு நாள் அப்படி ஆகிடுச்சு” என அவர் கூறும் நிலையில், பூர்ணிமாவைக் குறிப்பிட்டு “இவள நான் எதுவுமே செய்யல.. நான் வேலை தான் செய்தேன்” என விஷ்ணு கூறுகிறார்.
மேலும், “என்னென்னவோ சொல்லிட்டே இருக்காங்க.. இவங்களலாம் வாழ்க்கைல பாக்கவே கூடாது மேம், வெறுப்பா இருக்கு” எனப் பேசுகிறார்.
“எப்படி இந்த வீட்டுக்குள்ள பாக்காம இருப்ப.. கண்ண கட்டிட்டு இருப்பியா” என விசித்ரா சிரித்தபடி கேட்க, நான் “அடுத்த வாரமே எவிக்ட் ஆகறேன் பாருங்க.. எனக்கு எதிரா கேம் விளையாடறாங்க.. கேம தாண்டி பொய்யா விளையாடக்கூடாது. நான் போய் பேசினேன் அவங்ககிட்ட” என மாயா, பூர்ணிமா, ரவீணா, நிக்சன் ஆகியோரைக் குறிப்பிட்டு பேசுகிறார்.
‘நான் கிவ் அப் பண்ண போறேன்!'
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் ஷாப்பிங் டாஸ்க்கில் விஷ்ணுவும் கூல் சுரேஷூம் சர்க்கரையை மறந்து விட்டு ஷாப்பிங் செய்யாமல் வரும்படியான ப்ரொமோ வெளியாகியுள்ளது.
பஸர் அடித்தும் சர்க்கரையை எடுக்க விஷ்ணு முயல, பிக்பாஸ் கண்டுபிடித்து குட்டு வைக்கிறார். பின் தொடந்து கூல் சுரேஷ் ‘இதெல்லாம் பிரச்னை இல்ல’ என சொல்ல, ‘இல்ல இவங்க செஞ்சிடுவாங்க.. நான் முடிச்சுக்கப்போறேன்” என விஷ்ணு கூறுகிறார்.
Roast pannirukalam but 2 days Continues ah panniruka kudathu!#Vishnu Paavum ya ☹️
— Mr. Nobody Das 🧊🔥🗿 (@Mr_Nobody_das) December 10, 2023
He is deserve this but not this much !
This is 10× of Poornima's Roast 💯
What you think about #Vishnu roasting? #biggboss7tamil #BiggbossTamil7#BiggBossTamilSeason7
pic.twitter.com/zP0rqdOAXB
கமல்ஹாசனிடம் இந்த வார இறுதியில் பலமான திட்டு வாங்கிய விஷ்ணுவுக்கு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அனுதாப அலை பெருகியுள்ளது.