Bigg Boss 5 Tamil | கோலாகலமாகத் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் 5..! இசையுடன் தொடங்கினார் கானா இசைவாணி
Bigg Boss 5 Tamil Contestants: நான் எப்போவுமே உங்கள் நான்தான் என உரையைத் தொடங்கினார் கமல்ஹாசன். முதல் போட்டியாளராக அறிமுகமானார் இசைவாணி
Bigg Boss 5 Tamil Contestants: கோலாகலமாகத் தொடங்கியது பிக்பாஸ் தமிழ் 5..! இசையுடன் தொடங்கினார் கானா இசைவாணி. இசைவாணியின் அறிமுக வீடியோவே கலக்கியது. துறைமுகப்பகுதியில் பிறந்தவராக தன்னை அறிமுகப்படுத்தியவர் சொல்லியது, முயற்சி செய்பவர்கள் எல்லோரும் கடந்த அதே முட்களின் ரணம். ”நான் ரொம்ப நல்லா பாடுவேன். ஆனா எல்லா இடத்துலயும் பாடவிடமாட்டாங்க. கடைசியா தான் மைக் கிடைக்கும். இப்போ Casteless Collective-இல் தொடங்கி வளர்ந்திருக்கேன்” என தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட இசைவாணி, இந்த மேடையை மிகச் சரியாக பயன்படுத்தப்போவதாக சொல்லியிருக்கிறார்.
வலிமை அப்டேட் கேட்டவர்களைப்போல, பிக்பாஸ் அப்டேட் கேட்ட ரசிகர்கள்களும்அதிகம். எங்கு பார்த்தாலும் பிக்பாஸ் குறித்த பேச்சுக்களும் , அதில் யார் யார் போட்டியாளர்களாக களமிறங்க இருக்கிறார்கள் என்பதுதான் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 ஆனது இன்று மாலை 6 மணியளவில் பிரம்மாண்ட செட் அமைத்து துவங்கவுள்ளது. இதன் நேரலை காட்சிகளை ஒளிபரப்பவும் விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பயனாளர்களும் நேரலையை காணலாம். நிகழ்ச்சி 6 மணிக்கு இனிதே தொடங்கியது. இந்த சீசனையும் முந்தைய சீசன்களையே தொகுத்து வழங்கிய உலக நாயகன் கமல்ஹாசனே தொகுத்து வழங்கிவருகிறார் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வரும் கமல்ஹாசனின் ஆடையை காதி துணியில் வடிவைத்துள்ளாராம் அமிர்தா ராம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இம்முறையும் லைவ் ஆடியன்ஸுக்கு இடமில்லை. வெர்ச்சுவலாக மட்டுமே ரசிகர்கள் பங்கேற்கலாம். அதேபோல ஒளிபரப்பு நேரத்தில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
View this post on Instagram
பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கொரோனாவிற்கான இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்க வேண்டும். தடுப்பூசி சான்றிதழ்கள் இருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். இம்முறை பிக்பாஸ் வீட்டிற்குள் கன்ஃபெஷன் அறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதைப்போலவேதான் பிங் நிறத்தால் ஆன படுக்கை ஒன்றும் நாற்காலி ஒன்றும் உள்ளது. அது போட்டியாளர்களில் சிறந்த அந்தஸ்து பெறுபவர்களுக்கு வழங்கப்படலாம் என கருதப்படுகிறது. பிக்பாஸ் வீடு, இந்த முறை பச்சைப் பசுமையாக நேச்சர் லவ்வர் தீமில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.