மேலும் அறிய

Bigg Boss Tamil: ரெட் கார்டுடன் வெளியேற்றப்பட்ட பிரதீப்! கவின் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு - என்ன சொன்னார் பாருங்க?

Bigg Boss Tamil Season 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்(Pradeep Antony) ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது நண்பரும் நடிகருமான கவின் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Bigg Boss Tamil 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப்(Pradeep) ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது நண்பரும் நடிகருமான கவின் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

பிக்பாஸ்:

கடந்த அக்டோபர் 1ஆம் தேதி முதல் ரசிகர்களின் மனம் கவர்ந்த சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 7 ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 7வது சீசனில் முதலில் அனன்யா ராவ், வினுஷா தேவி, பவா செல்லத்துரை, யுகேந்திரன், விஜய் வர்மா ஆகியோர்  நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர். தற்போது டான்ஸர் ஐஷூ,சரவண விக்ரம்,கூல் சுரேஷ், மணி சந்திரா, ரவீனா தாஹா, நிக்ஸன், அனன்யா ராவ், ஜோவிகா விஜயகுமார், விஷ்ணு விஜய், பிரதீப் ஆண்டனி, விசித்ரா,  மாயா கிருஷ்ணா, அக்‌ஷயா உதயகுமார், பூர்ணிமா ரவி ஆகியோர் உள்ளே அனுப்பப்பட்டனர். 

தொடர்ந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் பாடகர் கானா பாலா, பட்டிமன்ற பேச்சாளர் அன்ன பாரதி, விஜே அர்ச்சனா, நடிகர் தினேஷ் காமராஜ், ஆர்.ஜே.பிராவோ ஆகியோர் வைல்ட் கார்ட் எண்ட்ரீயாக உள்ளே நுழைந்தனர். 5 வாரங்கள் நிறைவடைந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா ராவ், பவா செல்லதுரை, யுகேந்திரன், வினுஷா தேவி, விஜய் வர்மா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இப்படியான நிலையில் இந்நிகழ்ச்சியில் முதல் நாளில் இருந்தே மிகுந்த சவால் மிகுந்த மற்றும் சர்ச்சைக்குரிய  போட்டியாளராக பிரதீப் வலம் வந்தார். 

View this post on Instagram
 
A post shared by Kavin M (@kavin.0431)

பிரதீப்புக்கு ரெட் கார்டு:

எதற்கெடுத்தாலும் மல்லுக்கட்டுவது, வாக்குவாதம் செய்வது, மிரட்டுவது, ஆபாசமாக பேசுவது, பெண்களிடன் இரட்டை அர்த்தத்தில் பேசுவது என ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்கு ஆளானார். ஆனாலும் முதல் வாரத்தில் கமல்ஹாசன் அவருக்கு அறிவுரை வழங்கியும் பிரதீப் மாறவே இல்லை என பிக்பாஸ் பார்வையாளர்களும் தொடர்ச்சியாக குற்றம் சாட்டினர். இப்படியான நிலையில் கடந்த வாரம் கூல் சுரேஷூடன் மோதிய பிரதீப் அவரை தரக்குறைவாக பேச தொடங்கினார். 

இது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. எதிர்பார்த்தப்படியே நேற்றைய எபிசோடில் அனைவரும் பிரதீப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். குறிப்பாக பெண்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக சொல்லப்பட்ட வாதத்தை ஏற்றுக் கொண்ட கமல், பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவதாக அறிவித்தார். இந்த முடிவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர். 

கவின் பதிவு:

இந்நிலையில் பிக்பாஸ் பிரதீப்பின் மிக நெருங்கிய நண்பர் வளரும் இளம் நடிகரான கவின்.  இவர் பிரதீப் வெளியேற்றத்தை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘உன்னைப் பற்றி அறிந்தவர்கள் எப்போதும் உன்னை அறிவார்கள்’ என தெரிவித்துள்ளார். அதில் பிரதீப் மற்றும் கவின் சபரிமலைக்கு மாலை அணிந்து இருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதன்மூலம் பிக்பாஸில் காட்டப்பட்டது பிரதீப்பின் உண்மையான முகம் இல்லை என கவின் தெரிவிக்கிறாரா? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு பிரதீப் பதில் சொன்னால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வரும். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
L.K.Advani: திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
திடீர் உடல்நலக்குறைவு.. நள்ளிரவில் பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி - தீவிர சிகிச்சை!
Embed widget