மேலும் அறிய
Advertisement
Bigg Boss Season 7 Tamil: ஒரு பக்கம் எவிக்ஷன்.. மறுபக்கம் கொண்டாட்டம்.. 75 நாட்களை நிறைவு செய்த பிக்பாஸ் நிகழ்ச்சி..!
Bigg Boss Season 7 Tamil: "நாமினேஷன் லிஸ்டில் உள்ள தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் உள்ளிட்டோரில் இறுதியில் யாருடைய புகைப்படம் நிறைவாகவில்லையோ அவர் வெளியேற்றப்படுவார்”
Bigg Boss Season 7 Tamil: பிக்பாஸ் வீட்டில் யாரும் எதிர்பாராமல் மிட் வீக் எவிக்ஷன் மூலம் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்ட நிலையில் இன்று 75வது நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி 73வது நாளை கடந்துள்ளது. ஓவ்வொரு வாரமும் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சீசன் 7 சென்றுக் கொண்டிருக்கிறது. அதேநேரம் ஒவ்வொரு வாரமும் பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் போட்டியாளர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். முதல் வாரத்தில் அனன்யா வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் பவா செல்லதுரை விருப்பத்தின் பேரில் வெளியேறினார். அடுத்ததாக விஜய் வர்மா என ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், பிரதீப் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
கடைசியாக குறைவான வாக்குகள் பெற்ற ஜோவிகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக பிக்பாஸ் வீட்டில் எலிமினேஷன் இல்லை என கூறப்பட்டது. இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான புரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், ” அதில் பிக்பாஸ் இல்லத்தில் எதிர்பாராத ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அது மிட் வீக் எவிக்ஷன். நாமினேஷன் லிஸ்டில் உள்ள தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, விஷ்ணு, நிக்சன் உள்ளிட்டோரில் இறுதியில் யாருடைய புகைப்படம் நிறைவாகவில்லையோ அந்த நபர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
திடீரென பிக்பாஸ் அறிவித்த மிட் வீக் எவிக்ஷனால் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும், நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, தினேஷ், நிக்ஸன், அனன்யா, கூல் சுரேஷ் மற்றும் விஷ்ணு ஆகியோர் தங்களது சூட்கேஷ் உடன் கார்டன் ஏரியாவிற்கு வந்த நிலையில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார். கடந்த நவம்பர் 26 ஆம் தேதி பிக்பாஸ் வீட்டிலிருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர்கள் விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் வைல்கார்ட் என்ட்ரியாக உள்ளே அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 75வது நாளை எட்டியுள்ளதுன் இதனை முன்னிட்டு போட்டியாளர்கள் கொண்டாட கேக் உள்ளே அனுப்பப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சி மூலம் தங்களுக்குள் என்ன மாற்றம் நடந்தது என்பதையும் விளக்கியுள்ளனர்.
மேலும் படிக்க: 16 Years Of Billa : அஜித்துக்கு கேங்ஸ்டர் முகம் கொடுத்த பயணம்.. 16 ஆண்டுகளைக் கடந்தது பில்லா..
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion