`ஒரு நேர உணவுக்கு 5000 ரூபாய் பில்!’ - பிக்பாஸ் சம்யுக்தாவை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!
யூட்யூப் திறந்தாலே பிரபலங்கள் பலரும் பல்வேறு ஹோட்டல்கள், புதிய உணவு வகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.
யூட்யூப் திறந்தாலே பிரபலங்கள் முதல் புதுப்புது ஃபுட் ப்ளாக்கர்கள் வரை பல்வேறு ஹோட்டல்கள், புதிய உணவு வகைகள் ஆகியவற்றைத் தொடர்ந்து அப்டேட் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலமான சம்யுக்தா. சமீபத்தில் சில திரைப்படங்களிலும் நடித்திருந்த சம்யுக்தா, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக செயல்படுபவர். அவரது யூட்யூப் vlog வீடியோக்களும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்களும் அடிக்கடி வைரலாவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது.
சமீபத்தில் கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள உணவகம் மதிய உணவு உண்ட சம்யுக்தா அந்த உணவகத்தைப் பாராட்டி யூட்யூபில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். திருவனந்தபுரத்தில் வெகு பிரபலமான வில்லா மாயா ஹோட்டலில் சம்யுக்தா இந்த வீடியோவைப் பதிவு செய்துள்ளார். இந்தியாவின் மூன்றாவது மிகச் சிறந்த உணவகம் என அங்கீகரிக்கப்பட்டிருக்கும் வில்லா மாயா ஹோட்டல் தனக்கு மிகவும் விருப்பமான இடம் என்று தெரிவித்துள்ளார் சம்யுக்தா. தான் எப்போது திருவனந்தபுரம் வந்தாலும், இந்த ஹோட்டலில் உணவு உண்பது தன்னுடைய வழக்கம் எனக் கூறும் சம்யுக்தா தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு திருவனந்தபுரம் வந்துள்ளதாகக் கூறியுள்ளார்.
வில்லா மாயா ஹோட்டலின் வெளிப்புற அம்சங்களில் தன்னைக் கவர்ந்தவற்றைப் பற்றியும் இந்த வீடியோவில் பேசுகிறார் சம்யுக்தா. பிரம்மாண்டமாக மாளிகை போன்ற செட்டப்பில் இருந்த ஹோட்டல், கொரோனா தொற்று ஏற்பட்ட பிறகு பல்வேறு மாறுதல்களுக்கு உள்ளானதாகக் கூறுகிறார் சம்யுக்தா. தொடர்ந்து தனக்குப் பிடித்த உணவு வகைகளை ஆர்டர் செய்ய, மொத்த உணவு வகைகளும் அவரது மேசைக்கு வந்து சேர்ந்தன. அனைத்து உணவு வகைகளையும் ருசி பார்த்தார் சம்யுக்தா.
மொத்தமாக இறுதியில் வந்த பில், 5500 ரூபாய். அதனையும் கட்டிவிட்டு, அடுத்த வீடியோவில் பார்ப்போம் என்று புன்னகைத்துவிட்டுச் சென்றுள்ளார் சம்யுக்தா. இந்த வீடியோ தற்போது பலராலும் பேசப்பட்டு வருகிறது. பெரும்பாலானோர் இந்த பில் தொகையைச் சுட்டிக்காட்டி பேசி வருகின்றனர். அதனை இந்த வீடியோவின் கமெண்ட்களில் காணலாம்.
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்