Bigg boss 7 Tamil: மரண கலாய்.. ஜோவிகாவா இல்ல ஜோவிதாவா? ஸ்மால் பாஸையே குழப்பிய விஷ்ணு விஜய்!
Bigg Boss 7 tamil : பவாவை புவா என அழைத்து குழப்பிய விஷ்ணு விஜய், மீண்டும் நாமினேஷன் சமயத்தில் ஜோவிகாவை ஜோவிதா என சொல்லி ஸ்மால் பாஸிடம் சிக்கிய வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
![Bigg boss 7 Tamil: மரண கலாய்.. ஜோவிகாவா இல்ல ஜோவிதாவா? ஸ்மால் பாஸையே குழப்பிய விஷ்ணு விஜய்! bigg boss 7 tamil Vishnu vijay got confused during nomination and says jovitha instead of jovika Bigg boss 7 Tamil: மரண கலாய்.. ஜோவிகாவா இல்ல ஜோவிதாவா? ஸ்மால் பாஸையே குழப்பிய விஷ்ணு விஜய்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/09/2022c9889aadf62d38d17f3a5ae651a41696850462316572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஒரு ரியாலிட்டி ஷோ என்றால் அது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி. கடந்த ஆறு சீசன்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த வாரம் அக்டோபர் 1ம் தேதி முதல் துவங்கியது.
18 போட்டியாளர்கள் முதல் நாள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுத்தனர். கடந்த ஆறு சீசன்களில் இல்லாத ஒரு புதிய விஷயமாக இந்த முறை பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரு வீடுகள் உள்ளன. அதில் இரண்டாவது வீடான ஸ்மால் பாஸ் வீடு கிட்டத்தட்ட ஒரு ஜெயில் போல எக்கச்சக்கமான விதிமுறைகளுடன் இயக்கி வருகிறது.
ட்ரெண்டிங் வீடியோ :
பிக் பாஸ் வீட்டில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் 24 X 7 இணையத்தில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அங்கு நடக்கும் சில சம்பவங்கள் ட்ரெண்டிங்காகி இணையவாசிகள் கவனம் ஈர்க்கும். அந்த வகையில் கடந்த வாரத்தில் ஒரு நாள் போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு விஜய் சக போட்டியாளரான பவா செல்லதுரையின் பெயருக்கு பதிலாக புவாவை நாமினேஷன் செய்கிறேன் என சொன்னதும் நெட்டிசன்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து.
பவா புவா ஆன கதை :
புவா என்ற பெயரில் பிக் பாஸ் வீட்டில் யாருமே இல்லையே என ஸ்மால் பாஸ் சொல்லியும் கூட விடாப்பிடியாக 'புவன சந்திரன்' என பவா செல்லதுரையின் பெயரையே மாற்றிய அந்த காமெடியை தொடர்ந்து மீண்டும் மற்றொரு போட்டியாளரின் பெயரை வைத்து ஸ்மால் பாஸையே குழப்பியுள்ளார் விஷ்ணு விஜய். அந்த காமெடியாக வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
மீண்டும் குழம்பிய விஷ்ணு :
அதே நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறும் போது விஷ்ணு விஜய் நாமினேட் செய்த இரண்டு போட்டியாளர்களில் ஒருவர் ஜோவிகா. ஆனால் விஷ்ணு விஜய்க்கு அது ஜோவிகாவா இல்லை ஜோவிதாவா என பயங்கரமான குழப்பம். ஒரு வழியாக அது ஜோவிதா என ஸ்மால் பாஸிடம் கன்பார்ம் பண்ண அவரும் நக்கலாக "அப்படி யாரும் இங்க இல்ல" என சொல்லிவிட்டார்.
"என்னையே குழப்பீட்டிங்களே பிக் பாஸ்" என சொல்லி மீண்டும் சிக்கினார். முதலில் நம்ம ஸ்மால் பாஸ் பெயரில் ஒரு கிளாரிட்டிக்கு வருவோம் என சொல்லி தெளிவுபடுத்துகிறார். அதற்கு கூல் சுரேஷ் பொண்ணு பெயரை எல்லாம் சாட்சியாக எடுத்து கொள்கிறார் விஷ்ணு. ஒரு வழியாக ஸ்மால் பாஸையே குழப்பிய விஷ்ணுவிடம் "இப்போ தெரியுதா ஏன் எல்லாரும் உங்களுக்கு எதிரா இருக்காங்கனு" என்கிறார். "பெயர் தெரிலனா?" என விஷ்ணு கேட்க "பெயரே தெரியலையே..." என சொல்லி அவங்க பெயர் ஜோவிகா என தெளிவுபடுத்துகிறார் ஸ்மால் பாஸ்.
After giving the beautiful name of Bhuvanachandran to Bava Chelladurai, Vishnu presents a new contestant - Jovitha.#BiggBossTamil7 pic.twitter.com/bxIvl69H9Q
— Bigg Boss Follower (@BBFollower7) October 9, 2023
இது என்னடா இந்த விஷ்ணுவுக்கு புது வித வியாதியா இருக்கும் போல... என ரசிகர்கள் தலையில் அடித்து கொள்கிறார்கள். விஷ்ணுவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)