Bigg Boss 7 Tamil: "இனி உங்க கிட்ட நான் பேசமாட்டேன்” .. பிக்பாஸில் இருந்து ஒதுக்கப்பட்ட 6 போட்டியாளர்கள்...!
Bigg Boss 7 Tamil Promo: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 1) கோலாகலமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சி வார நாட்களில் இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரையும், வார இறுதி நாட்களில் இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது. தொடர்ந்து 7வது ஆண்டாக பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பல துறை சார்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதில், “கூல் சுரேஷ், பவா செல்லதுரை, அக்ஷயா உதயகுமார், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா” ஆகிய 18 பேரும் அடங்குவர். இவர்களில் முதல் வார கேப்டன்ஸி டாஸ்க் தொடக்க போட்டியாளராக வந்த கூல் சுரேஷ் தொடங்கி கடைசி போட்டியாளராக வந்த விஜய் வர்மா வரை சென்றது. இதில் முதல் வார கேப்டனாக விஜய் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் முதல் கேப்டனாக தேர்வு செய்யப்படுள்ள விஜய் வர்மாவை குறைவாக கவர்ந்ததாக கூறி 6 போட்டியாளர்கள் இன்னொரு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
#Day1 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 2, 2023
Bigg Boss Tamil Season 7 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #KamalHaasan #Disneyplushotstartamil #RendulaOnnuPaakkalaam #BiggBossTamil #BBT #BBTamilSeason7 #பிக்பாஸ் #VijayTelevision #VijayTV pic.twitter.com/O3UGvHLsDe
அதன்படி நிக்ஸன், பவா செல்லதுரை, அனன்யா, ஐஷூ, வினுஷா தேவி, ரவீனா தாஹா ஆகிய 6 பேரும் மற்றொரு பிக்பாஸ் வீட்டினுள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் வழக்கமான வீட்டுக்குள் வரும்போது தான் உங்களிடம் நான் பேசுவேன் என பிக்பாஸ் கறாராக சொல்லி விடுகிறார். மேலும் 6 பேரும் எந்த காரணத்தை கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என தெரிவிக்கும் காட்சிகள் இன்றைய முதல் எபிசோடில் இடம் பெறுகிறது. இதன்மூலம் முதல் நாளே பிக்பாஸ் பஞ்சாயத்து களைக் கட்டியுள்ளது.