Cool Suresh: கிரிமினலிடம் பயிற்சி எடுத்துட்டு தான் பிக்பாஸ் போகணும்.. கூல் சுரேஷ் சுளீர் பேட்டி!
Cool Suresh: சகிப்புத்தன்மை இருந்தால், பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும் என்று கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
'உண்மையாக யாரும் இல்லை'
பிக்பாஸ் (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய கூல் சுரேஷ் (Cool Suresh) முதன்முறையாக தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பேசியுள்ளதாவது:
”பிக்பாஸ் வீட்டில் இரண்டு, மூன்று பேர் தான் உண்மையாக இருக்கிறார்கள். விஷ்ணு உண்மையாக தான் நடந்து கொள்வார். அதேபோல, தினேஷ் நேர்மையா இருப்பார். மேலும், மணியும் அவரோட வேலையை தான் பார்ப்பார். தான் உண்டு, தான் வேலை என்று இருக்கிறார். மற்றவர்களிடம் உண்மையில்லை. பிக்பாஸ் வீட்டிற்கு செல்லணும் என்று நினைத்தால், கிரிமினல், கொள்ளை கூட்டம் தலைவன், போலீசார் இவர்களிடம் எல்லாம் பயிற்சி எடுத்து தான் செல்ல வேண்டும்.
அப்படி சென்றால் தான் பிக்பாஸ் வீட்டி இருக்க முடியும். பிக்பாஸில் இருக்கும்போது வீட்டு நியாபகம் இருந்ததால் தான் என்னால் விளையாட முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு, மணி, அர்ச்சனா, தினேஷ், விசித்ரா தான் உறுதியான போட்டியாளர்களாக உள்ளனர். ஆனால், என்ன இருந்தாலும் மக்கள் கையில் தான் அனைத்தும் இருக்கிறது. பிக்பாஸ் டைட்டிலுக்கு அதிர்ஷ்டம் தேவை. நீங்க பாருங்க, எதிர்பாக்காத ஆள் தான் டைட்டில் அடிப்பாங்க. பிக்பாஸ் வீட்டில் பொறுமை, சகிப்புத்தன்மையை நான் கற்றுக் கொண்டேன். சகிப்புத்தன்மை இருந்தால், பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியும்" என்றார்.
"பிரதீப் தான் டைட்டிலை வெல்ல வேண்டிய போட்டியாளர்”
தொடர்ந்து பேசிய அவர், "பிரதீப் தான் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டிய போட்டியாளர். அவர் வெளியேறாமல் இருந்திருந்தால், அவர் தான் வெற்றி பெற்றிருப்பார். இறுதி போட்டியில் நானும், பிரதீப்பும் இருந்திருந்தால், நானே அவர் கையை தூக்கி இருப்பேன். பிரதீப் தான் வெற்றி அடைவார் என்று நம்பிக்கையில் இருந்தேன். காலத்தின் கட்டாயத்தில் பிரதீப் வெளியே சென்றுவிட்டார். பிக்பாஸ் எபிசோட் எதையும் நான் பார்க்கவில்லை. என்னைப் பற்றி பேசியதைக் கேட்டால், தேவையில்லாத சங்கடம் தான் வரும்.
காசு, பணம் கிடைப்பதற்காக பொய் பேசி வாழ வேண்டாம். 5 பேர் சேர்ந்து பொய்யை உண்மையாக்கி விடுவார்கள். கேட்டால் இது தான் கேம் என்று சொல்வார்கள். பணத்திற்காக தான் எல்லாமே செய்கிறார்கள். நான் உண்மையாக இருந்ததால் தான் என்னால் பிக்பாஸில் இருக்க முடியவில்லை. நாம என்ன தான் உழைச்சாலும், நம்மளை 5 பேர் சேர்ந்து ஓரங்கட்டி விடுவார்கள். நம்முடைய திறமைக்கு ஒரு அங்கீகாரம் இல்லாமல் உள்ளே இருப்பதை விட, குடும்பத்தைப் பார்க்கலாம், வேலையை பார்க்கலாம். காசு, பணம் வெளியே போய் சம்பாதிக்கலாம்.
பொய் பேசி, ஒருவரை துன்புறுத்தி இந்தப் பணத்தை வாங்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால், தான் நான் வெளியே வர நினைத்தேன். இன்று வெளியே மற்றவர்கள் பேசுவதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. கோடி ரூபாய் கொடுத்தால் கூட இந்த சந்தோஷம் கிடைக்காது. எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.