Bigg Boss 6 Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேரடி இறுதி போட்டியாளராகப்போகும் அந்த நபர் யார்?
நேருக்கு நேர் டாஸ்க்கை தாண்டி கடும் போட்டிகளை விளையாடி வெற்றி பெருபவர்கள், நேரடியாக இறுதி சுற்றுக்கு அனுப்பப்படுவார் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது
திங்கட்கிழமையன்று இந்த வாரத்தின் நாமினேஷனிலிருந்து தப்பிக்க, அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதன் படி பிக்பாஸ் போட்டியாளர் ஒவ்வொருவரும், அவரவர்களின் ஸ்டராங் பாயிண்டை முன் எடுத்து வைக்க வேண்டும். அதில், எந்த போட்டியாளர் சிறந்த பதில் கொடுக்கிறாரோ, அவரே இந்த வாரத்தின் எலிமினேஷனிலிருந்து தப்பிப்பார் என சொல்லப்பட்டது. அந்தவகையில், அஸிம் எலிமினேஷன் நாமினேஷனிலிருந்து தப்பித்தார்.இந்த வாரத்தின் எலிமினினேஷன் நாமினேஷனுக்காக ஏடிகே, அமுதவாணன், கதிரவன், நந்தினி, ரச்சித்தா, ஷிவின், விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
View this post on Instagram
View this post on Instagram
நேற்றைய ப்ரோமோவில், நேருக்கு நேர் என்ற டாஸ்க் குறித்த காட்சிகள் இடம்பெற்றது. இந்த டாஸ்க்கில், இரண்டு பேருக்கு இடையே விவாதம் நடத்தப்படும். இதில், அனைத்து போட்டியாளர்களும் தங்களுக்காக வாதம் செய்ய வேண்டும். இந்த நேருக்கு நேர் டாஸ்க்கை தாண்டி கடும் போட்டிகளை விளையாடி வெற்றி பெருபவர்கள், நேரடியாக இறுதி சுற்றுக்கு அனுப்பப்படுவர் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டது. இந்த போட்டியில் வென்று, நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்பவர் யார், என்பதை இந்த வாரம் முழுவதும் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும்.
எஞ்சிய போட்டியாளர்கள் :
கடந்த வாரத்தில் மணிகண்டா வெளியேற, திருநங்கை ஷிவின் கணேசன், சீரியல் நடிகர் முகமது அஸிம், சரவணன் மீனாட்சி ரச்சிதா, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , அமுதவாணன், விஜே கதிரவன், விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 8 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.