Bigg Boss 6 Tamil : ‘சிறு’ நீர் வேண்டும் என கேட்ட ரச்சிதா.. லுக்கு விட்ட ராபர்ட்.. ரகளையான பிக்பாஸ் வீடு!
Bigg Boss 6 Tamil : “மன்னித்து விட்டேன். எனக்கு சிறுநீர் வேண்டும்.” என்று ரச்சித்தா கூறினார். அவரின் அருகில் இருந்த பிக்பாஸ் விட்டின் ராஜாவான ராபர்ட் ஒரு விதமான லுக்கை விட்டார்.
பிக்பாஸ் டாஸ்க்கில் ராணியாக மாறிய ரச்சித்தா சிறுநீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த வீடியோ காட்சி இப்போது பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், “ராஜ வம்சமும் அருங்காட்சியகமும்” என்ற டாஸ்க் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரத்தில், பிக்பாஸ் வீடு ராயல் அருங்காட்சியகமாக மாறவுள்ளதாகவும், இதில் ஹவுஸ்மேட்டுகள் மூன்று அணிகளாக பிரிய வேண்டும் என்ற விதி அமைக்கப்பட்டுள்ளது.
இந்த டாஸ்கிற்கு ஏற்றவாரு அனைவரும் ராஜா ராணி காலத்து கெட்-அப்பிற்கு மாறி ஜொலித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் அவ்வப்போது சண்டையையும் வேடிக்கை நிகழ்வுகளும் மாறி மாறி நடந்து வருகிறது.பிக்பாஸ் வீட்டின் ராணியான ரச்சித்தா, நேற்று கொடுக்கப்பட்ட உணவில் உப்பு மட்டும்தான் இருக்கிறது என்று சொன்னார். பிறகு அசிம் மற்றும் விக்ரமனுக்கு பெரிய சண்டை நடந்தது.
View this post on Instagram
அதைதொடர்ந்து, நேற்று உணவை சமைத்த ஷிவின், “ இனி சோத்தில் உப்பு போடவே மாட்டேன்” என ரச்சிதாவிடம் மன்னிப்பு கேட்டார். அதற்கு “மன்னித்து விட்டேன். எனக்கு சிறுநீர் வேண்டும்.” என்று ரச்சித்தா கூறினார். அவரின் அருகில் இருந்த பிக்பாஸ் விட்டின் ராஜாவான ராபர்ட், ஒரு விதமான லுக்கை விட்டார். ஆனால் ரச்சித்தா மீண்டும் சிறுநீர் வேண்டும் என்று சொன்னார்.
Ena karumatha ma kekra nee 😅😅😅😅#Rachitha #RachithaMahalakshmi @BBFollower7 @drkuttysiva #BiggBossTamil #BiggBoss #BiggBossTamil6 pic.twitter.com/AJ72EHsYOa
— Purusho (@dexers726) November 16, 2022
அவர் தெரிந்து பேசினாரா அல்லது தெரியாமல் பேசினாரா என்பது தெரியவில்லை. ஆனால், தூய தமிழில் பேச வேண்டும் என்பது பிக்பாஸ் வீட்டில் நடக்கும் ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் எனும் டாஸ்க்கின் விதிமுறையாகும். தூய தமிழில் பேசவேண்டும் என்ற விதிமுறையை பின்பற்ற வேண்டும் என்று நினைத்து கொஞ்சம் தண்ணீர் வேண்டும் என்பதற்கு பதில், சிறுநீர் என்று கேட்டு விட்டார் போல..இப்போது, ரச்சித்தா செய்த சம்பவத்தை, நெட்டிசன்கள் மீம்ஸ்களை இணையத்தில் பரவி கொண்டிருக்கின்றனர்.