(Source: ECI/ABP News/ABP Majha)
Bigg Boss 6 Tamil : முரட்டுத்தனமாக விளையாடும் மணி.. அழுது புலம்பிய ஜனனி.. இன்றைய எபிசோடில் ஒரு புடி இருக்கு!
Bigg Boss 6 Tamil : விடப்படியாக விளையாடிவரும் இந்த பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு, நாளை கமலிடம் பெரிய பஞ்சாயத்து காத்து கொண்டு இருக்கிறது என்பது தெரிகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று, இந்த வாரம் முழுவதும் விளையாடப்பட்ட ஸ்வீட் ஸ்டால் டாஸ்க் நிறைவடையவுள்ளது. அந்தவகையில், வெளியான மூன்று ப்ரோமோக்களின் தொகுப்பை இங்கு காணலாம்.
#Day33 #Promo1 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/RfysWp7ceV
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022
முதல் ப்ரோமோவில், போட்டியாளர்கள் அனைவரும் மிஷின் முன், சென்று ஒரே ஒரு அட்டைக்காக சண்டை போடுகின்றனர். அமுதவாணன் அந்த அட்டையை எடுத்து செல்ல, அவரிடம் இருந்து விடாப்பிடியாக அட்டையை பிடுங்க மணிகண்டன் முயற்சி செல்கிறார். இதில் கடுப்பான அமுதவாணன், “மொக்கையா நானு” என்று சத்தம் போட்டார். மணி செய்த காரியத்திற்கு எதிராக மகேஸ்வரி கண்டம் தெரிவித்தார். அதனை தொடர்ந்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
#Day33 #Promo2 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/es9hBd3moa
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022
இரண்டாவது ப்ரோமோவில், சரியாக விளையாடாதவர்களின் பெயர்களை சொல்லுங்கள் என பிக்பாஸ் கூறுகிறார். அப்போது, விக்ரமன் ஜனனியின் பெயரை சொல்கிறார். அதில் ஜனனி சற்று அப் செட் ஆனார். ஜனனியை ஆதரித்து அமுதவாணன் பேச துவங்கிய போது, ஜனனி ஆவேசப்பட்டு “ அண்ணா வேண்டாம்.. பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம்” என சொல்லி கையில் இருந்த தலையணையை தூக்கி போட்டு அழுக தொடங்குகிறார்.
#Day33 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethikitchenappliances @nipponpaintindia pic.twitter.com/bi2KLjWuTw
— Vijay Television (@vijaytelevision) November 11, 2022
இதைதொடர்ந்து வந்த மூன்றாவது ப்ரோமோவில், ஏடிகே ஜனனியை சமதான படுத்துகிறார். இதை பக்கத்தில் அமர்ந்து இருந்த மகேஸ்வரி உச்சுக்கொட்டுகிறார். அதைப்பார்த்து டென்ஷனான, ஏடிகே “நீங்கள் ஏன் இப்படி பண்றீங்க.. நீங்கள் எப்போதும் ஏசுவதற்கு நான் மேஞ்சு விட்ட மாடு அல்ல. சும்மா இருங்க.. உங்களுக்கு மட்டும்தான் கத்த தெரியுமா எனக்கு தெரியாதா..” என்று பல நாட்கள் பதுக்கி வைத்த ஆத்திரத்தை கொட்டி தீர்த்தார்.
இந்த வாரத்தின் எலிமினேஷன் நாமினீஸ்கள் :
இந்தவாரம் ஏடிகே, வி ஜே மகேஸ்வரி, ராம் ராமசாமி, அசிம், விக்ரமன், தனலட்சுமி, ஆயிஷா ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்கள். இவர்களில் மிக குறைந்த ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்பது குறிப்பிடதக்கது.