மேலும் அறிய

Bigg Boss 6 Tamil : கமலை எதிர்த்த ஆயிஷா... இந்த வாரம் தாக்குபிடிப்பாரா?

Bigg Boss 6 Tamil : கமல் பேசிக் கொண்டிருக்கும் போதே, என்னை அப்படி சித்தரிக்காதீங்க. ப்ளீஸ்.. என்று ஆயிஷா கமலை எதிர்த்து பேசியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாரவாரம் சனி மற்றும் ஞாயிறு அன்று பஞ்சாயத்து வைப்பது வழக்கம். அந்த வகையில், கமல் இந்த சீசனின் போட்டியாளர்களிடம் உரையாடினார். இதில், நீயும் பொம்மை நானும் பொம்மை குறித்து பல பிரச்சனைகள் எழுப்பப்பட்டது. 

வேண்டாம் என்றால் ஒதுங்க வேண்டும். மற்றொருவர் ஆட்டத்தை கெடுத்து ஒதுங்க கூடாது என்று கமல் ஆயிஷாவிடம் கேள்வி கேட்டார்.

திடீர் என்று எழுந்த ஆயிஷா, “ஷெரினாவிற்கு விளையாட வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. உனக்கு விளையாட வேண்டும் என்றால் என் பெயர் எழுதிய பொம்மையை வைத்து உட்கார்ந்து விடு, நான் அவுட் ஆகிவிடுவேன் என்று சொன்னேன். ரச்சித்தா அக்காவின் பொம்மை அப்படியே இருந்தது. அதனால் எடுத்து உள்ளே வைக்கலாம் என்று சென்றேன். ” என கூறினார். அதன் பின், அவர்கள் தொடர்ந்து உரையாடினர்.

கமல் : விளையாட்டில் இருந்து விலக வேண்டும் என்றால் என்ன செய்து இருக்க வேண்டும் 

ஆயிஷா : விளையாடாமல் இருந்து இருக்க வேண்டும்.

கமல் : அதை நீங்கள் செய்யவில்லை, அந்த விளையாட்டில் இன்னும் கொஞ்சம் விளையாட்டை புகுத்துவிட்டீர்கள்.

ஆயிஷா : என்னது சார்..?

கமல் : ரச்சிதா பொம்மை..

ஆயிஷா : ரச்சிதா அக்கா பொம்மையை, அந்த எண்ணத்துடன் நான் எடுக்கவில்லை. தயவு செய்து என்னை அப்படி போட்ரேட் (சித்தரிப்பது) பண்ணாதீங்க. ப்ளீஸ்.

கமல் : ஹஹா ஹஹா.. நான் என் கேரக்டரை தான் போட்ரேட் பண்ணிட்டு இருக்கேன். அவர் அவர் கேரக்டரை அவர் அவர்தான் போட்ரேட் செய்கிறார்கள். எனக்கு போட்ரேட் பண்ண வராது. 

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல், தேவையான விமர்சனத்தை மட்டும் செய்வார். ஆனால், அப்படி பேசுபவரை “நீங்கள் என்னை தவறாக சித்தரிக்காதீர்கள்” என்று ஆயிஷா பேசியுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. ஆயிஷாவின் இந்த பேச்சால், கமல் கடுப்பானதும், அதை அவர் வெளிக்காட்டாமல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதையும் உலகமே பார்த்து விட்டது. கமலை சீண்டியதால், இந்த வாரம் ஆயிஷா வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு என இப்போதே ஹாசியங்கள் பறக்கத் தொடங்கிவிட்டன.

இன்று வந்த ப்ரோமோவில் பிக்பாஸ், போட்டியாளர்களின் கருத்திற்கு ஏற்றபடி , அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தது. சற்று நேரத்திற்கு முன் வந்த இரண்டாவது ப்ரோமோவில்,  ஐந்து போட்டியாளர்களில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை பற்றி பேசிவருகின்றனர்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் : 

இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார்.  இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க : Bigg Boss 6 Tamil : மீண்டும் மீண்டும் நாமினேட் ஆகும் அசீம்.. இந்த வாரம் வெளியே செல்ல போகும் நபர் யார்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaibhav Suryavanshi:  வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: வெறும் 13 வயசுதான்! கோடிக்கணக்கில் ஏலம் போன சின்னப்பையன் - யார் இந்த சூர்யவன்ஷி?
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
IPL Auction 2025 LIVE: கமலஷே் நாகர்கோட்டியை 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது சென்னை
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
Rishabh Pant: ரோகித் கேப்டன்சி பிடிக்கவில்லையா? ரிஷப் பண்ட் மறைமுக தாக்கு! அடுத்த கேப்டன் பும்ராவா?
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
IPL 2025 CSK Squad: இதான்டா டீம்! சிங்கம் போல சீறும் CSK - ஸ்குவாடை பாருங்க!
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
School Leave: நாளை ரெட் அலர்ட்.! ஒரு மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IND vs AUS Test: வம்பிழுத்த ஆஸிஸ்.. இந்திய அணியின் தரமான பதிலடி போட்டிகள்
IPL 2025 Unsold Players:
IPL 2025 Unsold Players: "வார்னர் டூ பார்ஸ்டோ" அடிமாட்டு விலைக்கு கூட போகாத அதிரடி மன்னர்கள்!
Embed widget