Bigg Boss 6 Tamil : மீண்டும் மீண்டும் நாமினேட் ஆகும் அசீம்.. இந்த வாரம் வெளியே செல்ல போகும் நபர் யார்?
Bigg Boss 6 Tamil : வாரத்தின் முதல் நாளான இன்று, இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
![Bigg Boss 6 Tamil : மீண்டும் மீண்டும் நாமினேட் ஆகும் அசீம்.. இந்த வாரம் வெளியே செல்ல போகும் நபர் யார்? Bigg Boss 6 Tamil Day 22 Promo 1 Released Elimination Nominees for the upcoming have been selected in todays episode Bigg Boss 6 Tamil : மீண்டும் மீண்டும் நாமினேட் ஆகும் அசீம்.. இந்த வாரம் வெளியே செல்ல போகும் நபர் யார்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/31/fbb7f0a584d640d8b9ed6d5d83f1ba701667197865451102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான எலிமினேஷன் நாமினீஸ்களாக, அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று, பிக்பாஸ் போட்டியாளர்களில் சிலர் கமலிடம் நன்றாக வாங்கிக்கொண்டனர். அதை தொடர்ந்து, அனைவரையும் கடுப்பாக்கிய அசல் கோலார், குறைந்த ஓட்டிகளை பெற்று போட்டியை விட்டு வெளியேறினார்.22ஆம் நாளுக்கான முதல் ப்ரோமோவில், எலிமினேஷன் நாமினீஸ்களை தேர்வு செய்ய, அனைவரும் கன்ஃபெஷன் அறைக்கு சென்று, "ரொம்ப மானிபுலேட் பண்றாங்க, அத்துமீறி பேசுவது பிடிக்கவில்லை , பிரச்சனையை பெரிது படுத்துவது பிடிக்கவில்லை , எந்த சண்டையிலும் கலந்து கொள்ள மாட்டுகிறார்கள்" என மற்றவர்களை பற்றிய குறைகளை கொட்டி தீர்த்தனர்.
View this post on Instagram
அதிகமான குறை கொண்ட போட்டியாளர்களை நாமினேட் செய்வதை வழக்கமாக கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, இந்தவாரம் அசீம், ஆயிஷா, ஷெரின், கதிரவன் மற்றும் விக்ரமன் ஆகியோரை எலிமினேஷனுக்காக நாமினேட் செய்தது. இவர்களில் மிக குறைந்து ஓட்டுகளை பெறுபவர், இந்த வாரம் வீட்டில் இருந்து வெளியேறுவார். சற்று நேரத்திற்கு முன் வந்த இரண்டாவது ப்ரோமோவில், ஐந்து போட்டியாளர்களில் யார் எலிமினேட் செய்யப்படுவார் என்பதை பற்றி பேசிவருகின்றனர்
பிக் பாஸ் போட்டியாளர்கள் :
இந்நிகழ்ச்சியின் முதல் வாரத்தில், ஜிபி முத்து அவராகவே வெளியேறினார். பின் அதே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்ட சாந்தியை அடுத்து, இரண்டாம் வாரத்தில் அசல் கோலார் எலிமினேட் செய்யப்பட்டார். இவர்கள் சென்ற பின், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன்,அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அசீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் மற்றும் மைனா நந்தினி என மொத்தம் 18 போட்டியாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க : Kamal Haasan: ‘ஷிவினைப் போல் இருக்கும் சகோதரிகளுக்கு அண்ணன் நான்’... புல்லரிக்க வைத்த கமலின் பேச்சு
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)