![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bigg Boss 5 Tamil Promo: ‛பண்ணீங்களா இல்லையா பிக்பாஸ்...’ வெடித்த சுருதி... முரண்பிடிக்கும் அபிஷேக்!
ப்ரியங்காவும், வருணும் நடுவே அவர்களது கருத்துகளை முன்வைக்க முயற்சி செய்து “என்னமோ போங்கடா” என்ற தொனியில் கலைந்து செல்வதாக அமைந்திருக்கிறது இன்றைய ப்ரொமோ!
![Bigg Boss 5 Tamil Promo: ‛பண்ணீங்களா இல்லையா பிக்பாஸ்...’ வெடித்த சுருதி... முரண்பிடிக்கும் அபிஷேக்! Bigg Boss 5 Tamil Day 17 Promo 3 shruthi complaints to big boss abishek priyanka justify mistakes Bigg Boss 5 Tamil Promo: ‛பண்ணீங்களா இல்லையா பிக்பாஸ்...’ வெடித்த சுருதி... முரண்பிடிக்கும் அபிஷேக்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/20/f931bd5f8663575ca6da9f3b0e3d0408_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Bigg Boss 5 Tamil Day 17 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனிலும் பல திருப்பங்களை கொண்டிருந்தது. அதோடு, சிபி, பாவனி, ராஜூ, இசை ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிட, இந்த வாரத்திற்கான தலைவராக சிபி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸில் இன்று 17வது நாள். 17வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. அதில், கேமராவைப் பார்த்து ஸ்ருதி புகார் அளித்து கொண்டிருக்கிறார். ”இன்ஃலுயன்ஸ் பண்றாங்க, மேனிபுலேட் பண்றாங்க (மனசை மாற்றுவது), மெசேஜ் கேம் விளையாட பிக் பாஸ் எப்படி அனுமதிக்கிறாங்க. இதெல்லாம் கேமராவுல பதிவாகுதானு எனக்கு தெரியல. இத பிக் பாஸ் வந்து சரி செய்யனும்” என காட்டமாக பேசி கொண்டிருக்கிறார்.
அவரது புகார்களுக்கு மறுப்பு தெரிவித்து பேசும் அபிஷேக், “இன்ஃலுயன்ஸ் செய்யுறது என் பவர். நான் பேசுறத கேக்குறது, கேட்காம இருக்கிறதும் நீங்க தான் தேர்வு செஞ்சுக்கனும்” என பாயிண்ட் பேசினார். ப்ரியங்காவும், வருணும் நடுவே அவர்களது கருத்துகளை முன்வைக்க முயற்சி செய்து “என்னமோ போங்கடா” என்ற தொனியில் கலைந்து செல்வதாக அமைந்திருக்கிறது இன்றைய ப்ரொமோ!
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day17 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/mFXM1SlziH
— Vijay Television (@vijaytelevision) October 20, 2021
ப்ரொமோ 1:
#Day17 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/N2qEMJPsTo
— Vijay Television (@vijaytelevision) October 20, 2021
இந்த வாரம் நாமினேட் ஆனவர்கள்: பாவனி, அபிஷேக், அக்ஷரா, சின்னப்பொண்ணு, ப்ரியங்கா, தாமரை, ஐக்கி, இசைவாணி, அபினய்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)