Bigg Boss 5 Tamil Promo: யாருய்யா லீடர்... இசையை வசைபாடும் குரூப்... இருக்கு... இன்னைக்கு சம்பவம் இருக்கு!
இந்த வார தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் எல்லாவித உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி போட்டியை வெல்ல வேண்டும். ராஜூவும், இசையும் இதற்கு போட்டியிடுவதாக தெரிகிறது.
Bigg Boss 5 Tamil Day 15 Promo: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் அக்டோபர் 17-ம் தேதி எபிசோடில் வெளியேறப்போவது அபிஷேக்கா, நாடியா சங்கா என செக் வைத்து இண்டர்வெல் விட்டார் கமல். சஸ்பென்ஸ் எல்லாம் முடித்து இறுதியில் நாடியா சங்கின் எலிமினேஷனை அறிவித்தார் கமல். இந்த சீசனில் முதல் எலிமினேஷனை சந்திதுள்ள பிக் பாஸ் வீடு, இந்த வாரத்திற்கான நாமினேஷனை இன்று பதிவு செய்ய உள்ளது.
Biggboss Tamil 5 | எல்லோருக்கும் ஜோசியம் வாசிக்கும் அபிஷேக்.. வெளியேறிய நாடியா சங்
இந்நிலையில், 15வது நாளுக்கான இரண்டாவது ப்ரொமோ சற்றுமுன் வெளியானது. இதில், இந்த வார தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான போட்டியில் எல்லாவித உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்தி போட்டியை வெல்ல வேண்டும் என பிக் பாஸ் ஒரு டாஸ்க் நடத்துகிறார். ராஜூவும், இசையும் இதற்கு போட்டியிடுவதாக தெரிகிறது. சக போட்டியாளர்கள் அவர்களை சிரிக்க, அழ வைக்க முயற்சி செய்கின்றனர்.
இதோ அந்த ப்ரொமோ வீடியோ உங்கள் பார்வைக்கு...
#Day15 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/t7BgvhlK4Y
— Vijay Television (@vijaytelevision) October 18, 2021
அப்போது இசையைப் பார்த்து, “சட்ட வாங்குறதுக்கு எவ்வளவு கஷ்டப்பட்ட” என ஒரு போட்டியாளர் கேட்க, இதுபோன்ற தனிநபர் பிரச்சனைகளை சொல்லி சீண்டக்கூடாது என இமான் அண்ணாச்சி கண்டிக்கிறார். போட்டியாளர்களின் கமெண்ட்ஸ்களை கேட்டு எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டி கொள்ளாமல் நிற்கிறார் இசை. ஏற்கனவே, இன்று காலை வெளியான முதல் ப்ரொமோவில் நாமினேஷன் பதிவு நடைபெறுவதாக வந்து காணொளியை அடுத்து, இப்போது பிக் பாஸ் வீட்டில் மற்றுமொரு பரபரப்பான ப்ரொமோ வெளியாகியுள்ளது.
#Day15 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் - திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/FAqY8jjNZz
— Vijay Television (@vijaytelevision) October 18, 2021
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்