Bigboss Priyanka : பிக்பாஸ் நண்பர்களுடன் இரவில் சென்னையைச் சுற்றும் பிரியங்கா..!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடன் பங்கேற்ற நண்பர்களுடன் பிரியங்கா சென்னையில் சுற்றி வந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தமிழ்நாட்டிலே அதிக ரசிகர்களை கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் திகழ்கிறது. இந்த சீசனில் பங்கேற்பதால் மேலும் பிரபலம் ஆகலாம் என்ற நோக்கத்தில் பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இவர்களில் ஏற்கனவே பிரபலமான பலரும் பங்கேற்று வருகின்றனர். கடந்த சீசனில் பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தவர் பிரியங்கா.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே மிகவும் பிரபலமான தொகுப்பாளராக வலம் வந்தவர். விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளராக வலம் வருகிறார். பிக்பாஸ் சீசன் 5க்கு பிறகு மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த நிலையில், இவர் தனது பிக்பாஸ் நண்பர்களுடன் இரவு நேரத்தில் வெளியில் சுற்றி வந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிஷேக், வருண், பாவ்னி, சிபி ஆகியோர் பிரியங்காவின் நெருங்கிய நண்பர்களாக தற்போது திகழ்ந்து வருகின்றனர். இவர்களுடன் பிரியங்கா சமீபத்தில் அவுட்டிங் சென்றிருந்தார். அப்போது, இவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டிருந்தனர்.
மேலும் படிக்க : Rashmika Mandanna YouTube: என்னைய பத்தி தெரிஞ்சுக்கணுமா.. இங்க வாங்க.. யூடியூப் சேனலில் முதல் வீடியோவை வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா..!
இந்த நிலையில், நண்பர்களுடனான சந்திப்பின்போது இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் புகைப்படம் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் அபிஷேக், வருண், பாவ்னி, சிபி ஆகியோர் பிரியங்காவுடன் உள்ளனர். பிரியங்கா சாலையின் நடுவில் உள்ள தடுப்புக் கம்பியை பிடித்தவாறு போஸ் கொடுக்கிறார். இந்த படங்களை பிரியங்காவே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் தொடரில் பிரியங்கா பங்கேற்ற சீசன் 5ல் டைட்டில் வென்றது ராஜூவாக இருந்தாலும், அந்த சீசனிலே அதிக சம்பளம் பெற்ற பிரபலமாக பிரியங்காவே திகழ்ந்தார். பிரியங்கா பிரபலமான தொகுப்பாளர் என்பதால் வாரத்திற்கு 2 லட்சம் என்ற வீதம் 16 வாரத்திற்கு ரூபாய் 32 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Aishwaryaa-Simbu Combo: மாஸ் ஹீரோவுக்கான திரைக்கதை ரெடி.. சிம்புவுடன் கைகோக்கும் ஐஸ்வர்யா ரஜினி!? ரசிகர்கள் உற்சாகம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்